நீங்க கூட்டணிக்கு வாங்க பாத்துக்கலாம்.. திமுகவுக்கு ஓபிஎஸ்-ஐ அழைத்த திருமா! எடப்பாடி மீதும் அட்டாக்!
மதுரை: ஓ பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர், சகிப்புத்தன்மை உள்ளவர், சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு எனவும், விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால் வரவேற்பேன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வழக்கமான வாக்குறுதிகள். திமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் கூட இது தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திமுக எதிராக அதிமுக அறிவித்திருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே தேர்தல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. விடுதலை சிறுத்தைகள் கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம்.

திருமாவளவன்
திமுக மகளிர் மேம்படுத்துவதற்காக, மாணவச் செல்வங்களுக்கும் மேம்படுத்துவதற்கு உரிமை தொகையாக வழங்குகிறது சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிற அல்லது காலகாலமாக வஞ்சிக்கப்பட்டு நிலையில் இருக்கின்றனர். அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில் மேம்படுத்தும் என்ற நிலையில் அந்த திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சிகள் வரவேற்றது. இதனால் ஏற்படுகிற நிதிச் சுமை என்பது சமாளிக்க தக்க கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் இந்த நிலைப்பாட்டை திமுக மேற்கொண்டு இருக்கிறது.
ஒன்றிய அரசு
கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் இந்திய ஒன்றிய அரசு மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்துக் கூட தமிழகத்தின் மொத்த உற்பத்தி GDPயை உயரச் செய்து இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.
விஜய்
விஜய் யார் கூறுவதையோ எழுதிக் கொடுப்பதையோ அவர் பேசுகிறார். திமுக எதிர்ப்பை மட்டுமே அவர் பேசுகிறார். கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை வரை அவருக்கு அஜெண்டாவாக உள்ளது திமுக எதிர்ப்பு மட்டும் தான். திமுக எதிர்ப்பு என்றாலும் மாற்றுக் கருத்து இல்லை செயல் திட்டம் என்ன, யாருக்காக கட்சி தொடங்கினார் என்று எந்த இடத்தை நோக்கி அவர் பயணிக்கிறார் என தெரியவில்லை. இதுவரை அரசியல் களத்தில் இருக்கிற என்னைப் போன்றோர் புரிந்து கொள்ள முடியவில்லை.
திமுக கூட்டணி
விசிகவுக்கு தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது. பார்க்கலாம் எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இயலாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை, விமர்சனம் இருக்கலாம். ஆனால் எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும்.
ஓ பன்னீர்செல்வம்
தொகுதி பங்கிட்டால் எந்த சிக்கலும் இருக்காது. ஓ பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத்தன்மை உள்ளவர். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னைக்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை. அவர் திமுகவில் இணைந்தால் அதை வரவேற்கிறேன்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications