இலங்கை தேர்தல் முடிவு மிகுந்த கவலையளிக்கிறது - திருமாவளவன் எம்.பி.
Recommended Video
சென்னை: இலங்கை தேர்தல் முடிவு மிகுந்த கவலை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் தமிழர்களுக்கு நீதி முற்றிலும் மறுக்கப்படும் நிலை உண்டாகக்கூடும் என அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.
இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழ்ச்சமூகத்திற்கு பெருந்தீங்கை உருவாக்கும் எனக் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவு
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துக் கூறும் நிலையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மிகுந்த கவலை
கோத்தபய ராஜபக்சே வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா, கடந்த பத்தாண்டுகளில் பன்னாட்டு புலனாய்வு விசாரணை நடத்தியிருந்தால் ராஜபக்சே குடும்பத்தினர் இந்நேரம் தண்டிக்கப்பட்டு இருப்பார்கள் என்றும், அவர்களால் தேர்தலில் போட்டியிட்டிருக்க இயலாமல் போயிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிகிட்டவில்லை
ஐ.நா.பேரவை உள்ளிட்ட சர்வதேசம் சமூகம் இலங்கை தமிழர்களுக்கு நீதிகிட்ட ஒத்துழைக்க முன்வராதது பெரும் ஏமாற்றம் எனக் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் தமிழ்ச்சமூகத்திற்கு நீதி முற்றிலும் மறுக்கப்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகாரம்
இனப்படுகொலை குற்றமிழைத்தவர்களே மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு பெருந்தீங்கை ஏற்படுத்தும் என திருமாவளவன் அச்சம் தெரிவித்துள்ளார். இதனிடையே வைகோவும் இலங்கை தேர்தல் முடிவு கவலையளிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications