உயர்சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடா.. தீர்ப்பு "உச்ச அநீதி".. மேல்முறையீடு செய்வோம்! திருமாவளவன் பளீர்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் "உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏழைகள்
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவில் திருத்தத்தை மேற்கொண்டு புதிய மசோதாவை கடந்த 2019ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு. ஆனால் பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்டோர் மேல் முறையீடு செய்திருந்தனர். அதில், இந்த இட ஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையான கட்டமைப்பை மீறும் வகையில் உள்ளதாக கூறியிருந்தனர்.

தீர்ப்பு
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லிலித் தலைமையில் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, நீதிபதி எஸ்.ரவீந்திர பட், நீதிபதி பெலா எம்.திரிவேதி மற்றும் நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டன. தீர்ப்பில், 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அரசின் நடவடிக்கை செல்லும் என்றும் அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்றும், 2 நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதால் மத்திய அரசின் நடவடிக்கை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.

உயர் ஜாதியினருக்கு மட்டும்
தீர்ப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதாவது இந்த இட ஒதுக்கீடு முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்காமல், இதில் இதர சமூகத்தினரும் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருந்தார். இந்த வழக்கில் எதிர் தரப்பின் பிரதான வாதமும் இதுதான். அதாவது உயர் ஜாதியினர் மட்டுமல்லாது அனைத்து ஜாதியினருக்கும் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் நீதிமன்றம் இதனை நிராகரித்துள்ளது.

விமர்சனம்
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில், "இந்த தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ட்வீட்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது. இது உச்ச அநீதி. இதனை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா சாதிகளிலும் உள்ள ஏழைகளுக்கில்லை. உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும்தானாம். அப்படியென்றால், இது எப்படி பொருளாதார அளவுகோலைக் கொண்ட தீர்ப்பாகும்? சாதி அடிப்படையிலான பொருளாதார அளவுகோல் என்பது சமத்துவத்தை மறுக்கிறது என்றே இருவர் செல்லாதென கூறியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications