Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவன், திருமுருகன் காந்தி ரியல் ஹீரோ.. நாங்க வெறும் நிழல்.. காசா மக்களுக்காக கர்ஜித்த சத்யராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காசாவில் இஸ்ரேல் நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி போர் குற்றத்தில் ஈடுபட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடத்தப்படும் இந்த கோர தாக்குதலில் சுமார் 65,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்தும், காசா மக்களுக்கு நீதி கேட்டும் பெரியாரிய கூட்டமைப்பினர் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், திருமாவளவன், திருமுருகன் காந்தி தான் ரியல் ஹீரோக்கள் என்று காசா மக்களுக்காக ஆவேசமாக பேசியதில் அரங்கம் அதிர்ந்தது.

கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், "இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதை கடமையாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். மனித வாழ்வை மேம்படுத்துவதற்காக தான் விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கண்டுபிடிப்புகளை கொண்டு வருகிறார்கள். அதன் மூலம் மனித வாழ்க்கை எளிமையாகிறது. ஆனால் சில கொலைகார பாவிகள் மனிதர்களை கொலை செய்வதற்காக விஞ்ஞானத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Sathyaraj Gaza

இஸ்ரேலின் இன படுகொலை

அதுவும் காஸாவில் நடப்பதை பார்க்க சகிக்கவில்லை. அந்த மக்கள் குடும்பத்தினருடன் எப்படி நிம்மதியாக இருப்பார்கள். கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையா. குரங்கில் இருந்து மனிதன் தோன்றியதாக சொல்வார்கள். இவர்கள் எல்லாம் முழுமையாக மனிதர்களாகவில்லை. பாதியிலேயே மனித வளர்ச்சி நின்றுவிட்டது. அதனால் தான் தவறு நடக்கிறது.

இதை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும். ஐநா சபை தலையிட வேண்டும். இப்படித்தான் இன படுகொலை நடக்கும். ஈழத்தில் விடுதலைக்காக போராடிய போராளிகளுடன், அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். போர் என்கிற பெயரில் மொத்த மக்களையும் அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டது. அதற்கு அமெரிக்கா துணை போய் கொண்டிருக்கிறது.

எங்கள் கடமை

இவர்கள் ஒரு கூட்டம் நடத்தினார் போர் நிற்குமா என்று கேட்கலாம். நிற்கும். இன்றைக்குள்ள சமூகவலைதள காலத்தில், நாம் ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுத்தால் அது உலகம் முழுவதும் சென்றடையும். எனக்கு உணர்ச்சி கொந்தளிக்கிறது. இது மாதிரியான கூட்டங்களில் எங்களை மாதிரியான கலைஞர்கள் கலந்து கொள்வது கடமை.

சினிமா ஒரு வியாபாரம். எங்களிடம் கொஞ்சம் திறமை உள்ளது. அதை வைத்து சம்பாதிக்கிறோம். எங்களுடைய புகழ் இதுபோன்ற மக்களுக்கு உதவவில்லை என்றால் நாங்கள் பிரபலமாக இருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தலைவர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு சிறை வாசம் எல்லாம் சாதாரணம். தம்பி திருமுருகன் காந்திக்க சாதாரணமாக விஷயம்.

ரியல் ஹீரோ

போராட்டம், சிறைவாசம் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் அது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம். திருமாவளவன், திருமுருகன் காந்தி மாதிரி இங்கு மேடையில் உள்ளவர்கள் தான் உண்மையான ஹீரோ. நாங்கள் எல்லாம் நிழல் ஹீரோ. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுக்கும்போது, அனைத்து மக்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அதில் மதம், சாதி, கடவுள் எதுவும் கிடையாது. மனிதநேயம் ஒன்று தான் உள்ளது. இது ஏதோ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடக்கும் கூட்டம் என நினைத்துவிட வேண்டாம். இது மனித நேயத்திற்கு ஆதரவாக நடைபெறும் கூட்டம்.

உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதை மறந்துவிடாதீர்கள். மனித உயிர்களை மதமாக பிரித்து பார்க்காதீர்கள். உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்." என்றார். அவரின் பேச்சுக்கு விசில் பறந்தது தொடர்ந்து சத்யராஜ், திக தலைவர் ஆசிரியர் வீரமணி அனுப்பிய கண்டன அறிக்கையை வாசித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+