"ஹிந்தி".. மீண்டும் தேசிய கல்வி கொள்கை: ஹைகோர்ட்டுக்கு போன திருமாவளவன், முத்தரசன்.. புதிய மனு
புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்துநிலைகளிலும் தொலைநோக்கு சீர்திருத்தங்களைக் கொண்டுள்ளது.
அதாவது, மாநிலங்களே தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சில பரிந்துரைகளை வடிவமைத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு முழுச் சுதந்திரமும் நெகிழ்வுத் தன்மையும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது..

இந்தி மொழி
மற்றொரு புறம், இந்த புதிய கல்வி கொள்கை குறித்த சில கட்டுக்கதைகளும் தவறான கருத்துகளும் நிலவுகின்றன... தமிழக மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்று வலிய சொல்லப்பட்டு வருகிறது.. எனினும், எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என தெளிவாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிபுணர்கள் விளக்கம் தந்து வருகிறார்கள்.

தேசிய கல்வி கொள்கை
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்தி இல்லாமல் தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததாகவும், இந்தி இல்லாமல் இந்தியா சாதித்தவை ஏராளம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கல்வி கொள்கை
இந்தி தெரியாத தலைமுறையினரிடம், இந்தியை தேவையில்லாமல், கூடுதல் சுமையை திணித்து சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்... அதனால், எந்த காரணமும் இல்லாமல் தேசிய கல்வி கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்கும் முயற்சியை தமிழகம் ஏற்க கூடாது என்றும் எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முத்தரசன்
அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 1976 ம் ஆண்டின் அலுவல் மொழி விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்பதால்,1963 ம் ஆண்டின் அலுவல் மொழி சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்பதனால் மனுதாரின் வழக்கு சட்ட விரோதமானது என்றும், இந்த மனுவை தாக்கல் செய்து 2020 தேசிய கல்வி கொள்கையின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதை தடுக்க நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்பேசனைக்குரியது
தமிழக அரசு சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் குழுக்களை அமைத்து அறிக்கைகளை பெறுவதாக மனுதாரர் கூறுவது, கண்டனத்துக்குரியது.. மனுதாரர் தமிழகத்தில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும், சமஸ்கிருத மொழியாக கொண்டு வர வேண்டும் என்பது ஆட்சேபனைக்குரியது என்றும், தமிழகத்திற்கு அலுவல் மொழியின் கீழ் வழங்கப்படும் விலக்கிற்கு எதிரானது என்றும் எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications