நாங்குநேரியில் காங்கிரஸ்.. விக்கிரவாண்டியில் திமுக .. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி
Recommended Video
சென்னை : நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் நின்று வெற்றி பெற்ற தொகுதி, அதேபோல் விக்ரவாண்டி தொகுதி திமுகவின் தொகுதி, ஆகையால் நாங்குநேரியில் காங்கிரசும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற வசந்தகுமார், நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.

விட்டுக்கொடுக்க காங்கிரஸ் மறுப்பு
இதில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரும்புவதாக சொல்லப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக சார்பில் உதயநிதி களம் இறங்குவரா என்ற பரபரப்பு நிலவுகிறது.

விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
இந்நிலையில் திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே விண்வெளி ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டு வந்துள்ளன. சந்திராயன் 2 இரண்டு கிலோமீட்டர் உள்ள நிலையில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தாலும் இந்த முயற்சியை மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

விக்ரவாண்டியில் திமுக
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் நின்று வெற்றி பெற்ற தொகுதி அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி திமுகவின் தொகுதி. ஆகையால் நாங்குநேரியில் காங்கிரசும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

ஸ்டாலினுக்கு பாராட்டு
காங்கிரஸ் கட்சி ஆய்வு பண்ணும் நோக்கத்தில் காங்கிரஸ் பலமாக இருக்கிறதா என்ற கேள்வியை கே.எஸ். அழகிரி கேட்டிருக்கலாம். சி.பி. இராதாகிருஷ்ணன் திமுக. தலைவர் ஸ்டாலின் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சபை நாகரிகம் கருதி அவரைப் புகழ்ந்து பேசி இருக்கலாம்" என கூறினார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications