சண்டையில் முடிந்த நிலத்தகராறு.. திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு.. போலீசார் விசாரணை!
சென்னை: திருப்போரூர் அருகே திமுக எம்எல்ஏ இதயவர்மனின் அப்பா லட்சுமிபதி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர் அருகே செங்காடு என்ற கிராமம் உள்ளது. இங்கு திமுக எம்எல்ஏ இதயவர்மன் வசித்து வருகிறார். இவரின் வீட்டுக்கு பின்புறம் அரசு நிலப்பகுதி உள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் நிலத்தில் இமயம்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் பணியை செய்து வருகிறார்.

அந்த ரியல் எஸ்டேட் இடத்திற்கு செல்ல வழியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நிலத்தை இதயகுமார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அரசு நிலத்தில் சாலை அமைத்து, ரியல் எஸ்டேட் நிலத்திற்கு வழியை ஏற்படுத்த முயன்று உள்ளனர்.
இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்துள்ளது. திமுக எம்எல்ஏ இதயவர்மன் இதை தட்டிக்கேட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவ்வப்போது திமுக எம்எல்ஏ இதயவர்மனின் அப்பா பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆனால் இது எதிலும் தீர்வு எட்டப்படவில்லை.
இன்று அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து உள்ளது. அதிலும் எம்எல்ஏ இதயவர்மன் வீட்டு நிலத்தை ஆக்கிமிரப்பு செய்யும் வகையில் இமயம்குமார் பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். இதை தடிக்கேட்க எம்எல்ஏவின் அப்பா லட்சுமிபதி அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது இமயம்குமார் ஆட்கள் லட்சுமிபதியை அரிவாளால் தாக்க வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கு இருந்தவர்களை நோக்கி லட்சுமிபதி குருவிகளை சுடும் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
இது தொடர்பாக இமயகுமார் தரப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதயக்குமார் ஆட்கள் எங்களை துப்பாக்கியால் சுட வந்தனர். அதனால் தற்காப்பிற்காக சுட்டேன் என்று லட்சுமிபதி விளக்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications