திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம்..!
சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கும் பணிகள் நடப்பாண்டிலேயே தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவிப்பு
சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. இந்தப் பல்கலைக்கழகம் வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருவதால் அந்த மண்ணின் மைந்தரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

காரசார விவாதம்
துரைமுருகனுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டை போடுவதாக சாடினார். மேலும், நிர்வாக வசதிக்காகவே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் அதனை ஏற்க மறுத்த துரைமுருகனால் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

முதலமைச்சருக்கு நன்றி
விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்புக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நன்றி தெரிவித்து பேசினார். இதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடப்பாண்டிலேயே புதிய பல்கழைக்கழகம் அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

வட தமிழகம்
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும் என அந்த மாவட்ட மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அந்தக் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. புதிய பல்கலைக்கழகத்துக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications