லேடீஸ் ஹாஸ்டலுக்கு வந்த ரேபிடோ டிரைவர்.. விடுதிக்குள் சென்று வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பெண்கள் விடுதியில் செல்போன், தங்கச் சங்கிலி ஆகியவற்றை திருடியது மட்டுமல்லாமல் வடமாநில பெண்ணிடம் அத்துமீறியதாக ரேபிடோ பைக் டாக்ஸி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருவான்மியூரில் பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், தமிழக, வெளிமாநில பெண்கள் என ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சிலர் படித்தும் வருகிறார்கள்.

Thiruvanmiyur Rapido bike taxi driver arrested for theft

வடமாநில பெண் ஒருவர் நேற்று வெளியே சென்றுவிட்டு மீண்டும் ஹாஸ்டலுக்கு வர ரேபிடோ பைக் டாக்ஸியை புக் செய்தார். இதையடுத்து அந்த பெண் இருந்த இடத்திற்கு விக்னேஷ் என்பவர் வந்தார். அவர் அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு திருவான்மியூரில் உள்ள விடுதிக்கு சென்று அங்கு அவரை இறக்கிவிட்டார்.

பிறகு காசை வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டிய விக்னேஷ் திடீரென அந்த விடுதிக்குள் புகுந்து அங்கு அந்த வடமாநில பெண்ணிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்தார். மேலும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர் அணிந்திருந்த தங்க செயினையும் பறித்தார்.

இதனால் அந்த பெண் கூச்சலிடவே அங்கிருந்து விக்னேஷ் தப்பி ஓடினார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து விசாரணை நடத்தி அந்த நபரின் ரேபிடோ புக்கிங் தகவல்களை வைத்து கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரேபிட்டோ செயலிகளை முடக்குமாறு ஊபர், ஓலா செயலிகளின் டிரைவர்கள் கேட்டு போராட்டம் வெடித்திருந்த நிலையில் இது போல் திருட்டுச் சம்பவத்தில் ரேபிடோ ஓட்டுநர் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேபிடோ பைக் டாக்ஸியால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக உள்ளூர் ஆட்டோ டிரைவர்களும் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+