அவர் 20 ரூபாய் தினகரன்.. அவரை பார்த்து எங்களுக்கு பயமில்லை.. டிடிவியை கிண்டல் செய்த ஸ்டாலின்!
சென்னை: டிடிவி தினகரனை மக்கள் எல்லோரும் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகியவை தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளது.
இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. அவர் தற்போது திருவாரூர் சென்றுள்ளார்.

பேட்டி அளித்தார்
நேற்று சென்னை விமான நிலையில் பேட்டியளித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதில், திருவாரூர் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. திருவாரூர் கருணாநிதியின் தொகுதி. இங்கு திமுகதான் எப்போதும் வெல்லும். திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்தான் இங்கு வெல்ல போகிறார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரனை எல்லோரும் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கிறார்கள். ஆர்.கே நகர் மக்களே கூட அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள். டிடிவி தினகரன்தான் திமுகவை பார்த்து பயப்பட வேண்டும். திமுக தேர்தலை பார்த்து பயப்படுவதாக தினகரன் கூறுவது சிரிப்பு வர வைக்கிறது.

பெங்களூர் செல்கிறார்
டிடிவி தினகரன் வார வாரம் பெங்களூர் செல்கிறார். நேர்த்தி கடன் போல அவர் பெங்களூர் சென்று வருகிறார். ஆா்.கே.நகா் தொகுதியில் அவா் எப்படி வெற்றி பெற்றாா் என்பது ஊரில் உள்ள அனைவருக்கும் தொியும். அப்படிப்பட்ட தினகரனை பார்த்து நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும். அவர்தான் எங்களை பார்த்து அச்சப்பட வேண்டும்.

நிறைய வழக்கு
டிடிவி தினகரன் மீது நிறைய வழக்கு நிலுவையில் உள்ளது. சி.பி.ஐ. வழக்கு, பெரா வழக்கு, சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என பல வழக்குகளில் அவர் சிக்கி இருக்கிறார். இந்த வழக்குகளை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கும் டிடிவிதான் மக்களையும், தேர்தலையும் பார்த்து பயப்பட வேண்டும், என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications