பிரதமரே.. இதுதான் திராவிட மாடல்.. மோடியை மேடையில் வைத்துக்கொண்டே ‘க்ளாஸ்’ எடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. சமூக நீதி, சமத்துவம், பெண்கள் நீதியை உள்ளடக்கியது. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் எனப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Recommended Video
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு
இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரைச் சொன்னதும், திமுக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால் அவர் சற்று இடைவெளி விட்டுப் பேசினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேச எழுந்ததும் மீண்டும் தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.

முதல்வர் பேச்சு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி ஏற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் விழா இது. தமிழ்நாட்டில் திட்டங்கள் துவங்க வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் சார்பில் நன்றி. ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதிப்பங்கீடு காலப்போக்கில் மாறும். ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு அதிகம்.

ஜிஎஸ்டி நிலுவை
ஒன்றிய அரசின் நிதி குறைப்பால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ.14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்.

திராவிட மாடல்
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சமூக நீதி, சமத்துவம், பெண்கள் நீதியை உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம்" எனப் பேசினார். பிரதமர் மோடி பங்கேற்றிருக்கும் மேடையிலேயே மத்திய பாஜக அரசை "ஒன்றிய அரசு" என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசியதற்கு திமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் பிரதமரே என்று அழைத்தபடி, திராவிட மாடல் குறித்து ஸ்டாலின் விளக்கி கூறியதை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications