சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 40 டிகிரி வெயில்.. இது சும்மா டிரெய்லர்தான்.. இனிமேல்தான் மெயின் பிக்ஷர்- வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Weatherman: சென்னையில் 40 டிகிரி வெயில்.. இன்னும் அதிகரிக்கும்.. வெதர்மேன் தகவல்- வீடியோ

    சென்னை: சென்னையில் 40 டிகிரி செல்சியல் வெயில் கொளுத்தி வருகிறது. இது சும்மா டிரெய்லர்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிடுகையில், ஃபனி புயலுக்கு நன்றி. நல்லா பன்றே! சென்னையை விட்டு நகர நகர இந்த ஆண்டு முதல் முறையாக சென்னையில் 40 டிகிரி செல்சியல் வெயில் கொளுத்துகிறது.

    வார இறுதி நாட்களில் கொளுத்தும் வெயிலுக்கு முன்பு இது சும்மா டிரெய்லர்தான். இத்தனை சோகத்துடன் சென்னையில் வெயில் நிலவரத்தை அப்டேட் செய்கிறேன். மழை எப்போ சார் வரும் என்று மட்டும் கேட்காதீங்க.

    கஜா புயல் நிவாரணத்திற்கே பதில் தெரியல.. ஃபானி புயலுக்கு ரூ.309.75 கோடி முன் உதவித் தொகைகஜா புயல் நிவாரணத்திற்கே பதில் தெரியல.. ஃபானி புயலுக்கு ரூ.309.75 கோடி முன் உதவித் தொகை

    நல்ல வெயில்

    நல்ல வெயில்

    இன்றும் நாளையும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை அட்சரேகையை விட்டு ஃபனி நகர்ந்து வடக்கு பக்கம் செல்லும் போது வடமேற்கு காற்று மிகவும் வலுவடையும். இதனால் கடலுக்கு அருகே உள்ள மாவட்டங்களான வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பேஸ்புக்

    தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் சென்னையிலோ அல்லது தமிழகத்திலோ கரையை கடந்தால் தண்ணீர் பிரச்சினை அனைத்தும் தீர்ந்துவிடும். இது மிகவும் வலுவான புயல் என ஏற்கெனவே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    நல்லது இல்லை

    நல்லது இல்லை

    இந்த நிலையில் ஃபனி புயலோ வடமேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் தமிழக கடற்கரையை கடக்காத நிலை ஏற்பட்டது. தற்போது அந்த புயல் ஒடிஸா நோக்கி நகரத் தொடங்கியது. இது போல் புயல் வருவது போல் வந்துவிட்டு வேறு இடத்துக்கு செல்வது நல்லது இல்லை என வெதர்மேன் கூறியிருந்தார்.

    இனி வெயில் அதிகரிக்கும்

    இனி வெயில் அதிகரிக்கும்

    அது போல் 1998, 2003-ஆம் ஆண்டு இந்தியாவில் உருவான புயல் பர்மாவுக்கு சென்றதால் வெப்பம் அதிகரித்து ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். இதனால் இனி வெயில் அதிகரிக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu Weatherman says that Chennai is very hot at 40 C for the 1st time this year. This is just the trailer show before the weekend sizzle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X