விஜய் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்திருந்தால்.. இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே.. மிஸ் பண்ணிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியாகி 2 நாட்கள் ஆகிவிட்டது. அந்த உயிர்கள் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. தமிழக அரசு இதில் வழக்கு தொடுத்துவிட்டது.. இதில் அரசு இயந்திரம் மிக வேகமாக செயல்பட்டு உள்ளது. ஆனால் இதில் ஒரே ஒருவர்.. வாய் திறக்கவே இல்லை.. வெளியே வரவே இல்லை.. பொறுப்பு ஏற்கவே இல்லை.. அந்த நபர் நடிகர் விஜய்!

1. தமிழக வெற்றிக் கழக கூட்டத்திற்கு வந்த மக்கள் ஆதவ் அர்ஜூனாவை பார்க்க வரவில்லை. புஸ்ஸி ஆனந்தை பார்க்க வரவில்லை. அவர்கள் வந்தது விஜயை பார்க்க. ஆனால் விஜய் இன்று வரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

TVK Vijay

2. இந்த நொடி வரை கரூரில் நடந்ததற்கு விஜய் இரங்கல் தெரிவித்தாரே ஒழிய ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தானும் இதற்கு காரணம் என்று ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

3. முதல்வர் ஸ்டாலின்.. பொறுப்பாக பேசுகிறார். அதில், கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்; எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அப்பாவி மக்கள், தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள்

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கான விதி, நெறிமுறைகள் வகுக்கப்படும். இந்த நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

4. ஆனால் விஜய் இந்த நொடி வரை ஒரு வீடியோ கூட போடவில்லை. மாறாக வழக்கு தொடுக்கிறார்.

5. அதிலும் விஜய் தரப்பு வழக்கறிஞர்.. கூட்டத்தில் இறந்தது தவெக தொண்டர்களா என்ற சந்தேகம் உள்ளது என்று கூறுகிறார். அதாவது இறந்து போனவர்கள் எங்கள் தொண்டர்களே இல்லை என்று கை கழுவும் நிலைக்கு விஜய் சென்றுவிட்டார்.

6. விஜய்க்கு வழக்கு தொடுக்க நேரம் இருக்கிறது.. வழக்கறிஞரை சந்திக்க நேரம் இருக்கிறது.. சோஷியல் மீடியா influencers களுக்கு பணம் கொடுக்க நேரம் இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கொடுக்க நேரம் இல்லை.

7. சரி.. ஒரு வீடியோ ரெக்கார்ட் செய்து போட்டிருக்கலாம். அதற்கும் கூட விஜய்க்கு நேரம் இல்லை. நேற்று இரண்டு முறை வீடு மாறிய விஜய்.. ஒரு நொடி கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

8. சம்பவம் நடந்த அன்று விஜய் சென்னை வராமல் கரூரிலேயோ திருச்சியிலேயே தங்கி இருந்து மீட்பு பணிகளை செய்து இருக்கலாம். அப்போதே செய்தியாளர்களை சந்தித்து இருக்கலாம். விளக்கம் கொடுத்து இருக்கலாம். சென்னை வந்து பனையூரில் ஜாலியாக தூங்காமல் மக்களுடன் மக்களாக இருந்திருக்கலாம்.. ஒரு தலைவன் அதைத்தான் செய்வார்.. நடிகர்தான் வீட்டில் ஒடுங்கி.. ஹாயாக இருப்பார். விஜய் அதை அப்போதே செய்திருந்தால் இன்று பிரச்சனை இவ்வளவு கைமீறி போய் இருக்காது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+