உலக மொழிகளில் தமிழ் சென்றடைய செய்ய வேண்டியது இதுதான்.. வைரமுத்து முன்வைத்த யோசனை
சென்னை: உலக இலக்கியங்கள் தமிழுக்குள் வந்த அளவுக்குத் தமிழ் இலக்கியங்கள் உலக மொழிகளைச் சென்று சேரவில்லை என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள வைரமுத்து, இதற்காக சில யோசனைகளையும் முன்வைத்து இருக்கிறார்.
உலக மொழிகளில் தமிழ் சென்று சேர தமிழில் புலமைபெற்ற இளைய தலைமுறைக்கு ஸ்பேனிஷ், மேண்டரின், ரஷ்யன், ஜப்பானீஸ், ஜெர்மன், பிரெஞ்சு, அரபி போன்ற உலகமொழிகளை ஐந்தாண்டுகள் பயிற்றுவிக்க வேண்டும் என்றும், அவர்களின் வழியே தமிழின் மூல இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக உரியவர்களிடம் பேசியிருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
மொழிபெயர்ப்புக்
கருத்தரங்கைத்
தொடங்கிவைத்தேன்
"'தமிழுக்குள் உலகம்;
உலகுக்குள் தமிழ்' என்று
தமிழாற்றுப்படை முன்னுரையில்
முன்மொழிந்திருப்பதை
மீண்டும் வலியுறுத்தினேன்
உலக இலக்கியங்கள்
தமிழுக்குள் வந்த அளவுக்குத்
தமிழ் இலக்கியங்கள்
உலக மொழிகளைச்
சென்று சேரவில்லை

இனியொரு விதிசெய்வோம்
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
பன்மொழித்துறை ஒன்று
உருவாக்குவோம்
தமிழில் புலமைபெற்ற
இளைய தலைமுறைக்கு
ஸ்பேனிஷ், மேண்டரின், ரஷ்யன்,
ஜப்பானீஸ், ஜெர்மன், பிரெஞ்சு,
அரபி போன்ற உலகமொழிகளை
ஐந்தாண்டுகள்
பயிற்றுவிக்க வேண்டும்;
அதில் புலமை ஊட்டவேண்டும்
அவர்களின் வழியே
தமிழின் மூல இலக்கியங்கள்
மொழிபெயர்க்கப்பட வேண்டும்;
இது வாழையடி வாழையாக
இயங்க வேண்டும்
அப்போதுதான்
உலக மொழிகளில்
தமிழ் சென்று சேரமுடியும்
இதுகுறித்து
உரியவர்களோடு பேசுவேன்"
என்று பேசினேன்
உடன்
சென்னைப் பல்கலைக்கழகப்
பதிவாளர் முனைவர் ஏழுமைலை,
பேராசிரியர் ஜாகிர் ஹூசைன்,
இணை இயக்குநர் சங்கர சரவணன்,
மற்றும் கல்வியாளர்கள்" இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications