உளவுத்துறை வார்னிங்! முதல்வர் ஸ்டாலினுக்கு மத அடிப்படைவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்! போலீஸ் குவிப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் திருச்சி பயணத்தை முன்னிட்டு, அவருக்கு மத அடிப்படைவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் இன்று நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சி செல்கிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் இந்த மாநாடு சமயபுரம் டோல்கேட் அருகே பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.
இன்று காலை இதற்காக 8.30 மணிக்கு அங்கு கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.

திருச்சி
காலை 11.30 மணிக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் ஏறுகிறார். 12.30 மணிக்கு திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து சமயபுரம் செல்கிறார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினை வரவேற்று கவுரவிக்கிறார். இதன் பின் இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் போல இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக திருச்சி சிட்டி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வரின் பாதுகாப்பிற்கு மத அடிப்படை வாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளது. அதேபோல் தமிழ் அடிப்படை பேரினவாதிகளிடம் இருந்தும், அதிருப்தியில் இருக்கும் சில நபர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று திருச்சி சிட்டி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத அடிப்படை வாதிகள்
முதல்வர் ஸ்டாலினுக்கான நெருக்கமான பாதுகாப்பு, அவருக்கான கோர் செல் பாதுகாப்பு குழு மூலம் வழங்கப்படும் என்று திருச்சி சிட்டி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்புகள் கொடுத்த தகவலின்படி முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கூடுதல் பாதுகாப்பு
இதற்காக கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் போலீஸ் தரப்பு வட்டாரங்கள், இது பொதுவாக கொடுக்கப்படும் எச்சரிக்கைதான். முதல்வர் வெளியூர்களுக்கு செல்லும் போது இது போல பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அதேபோல் அவருக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருந்தால் அது பற்றியும் சொல்லப்படும். இது வழக்கமாக உள்ள நடைமுறைதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications