Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கந்து வட்டி கொடு.. மகளை கடத்தவா.." காஞ்சிபுரத்தில் ஒரு பகீர் சம்பவம்.. பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் வாங்கிய பணத்தோடு, அதிக வட்டியும் கட்ட வேண்டும். கட்டவில்லை என்றால் மகளைக் கடத்திவிடுவதாக மிரட்டல் வருவதாகப் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தபெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

கந்துவட்டி கொடுமைக்கு தினம் தினம் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

நம்முடைய அவசரத்தேவைக்கு கடன் வாங்குகிறோம். நாம் சொன்ன நாட்களுக்குள் கடனை வட்டியுடன் கட்டத்தவறும் போது, அந்த வட்டிக்கு வட்டி வந்து கந்துவட்டியாக நம் கழுத்தையே நெறிக்கும். கந்துவட்டித் தடுப்புச் சட்டம் எல்லாம் இருந்தும், இன்றைக்கும் பலர் கந்துவட்டியால் தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்கிறார்கள். ஆறு லட்ச ரூபாய் கடனுக்கு மூன்று கோடி கந்துவட்டி கட்ட வேண்டும் என்று மிரட்டப்பட்ட கொடூரமெல்லாம் நம் தமிழகத்தில் ஏற்கெனவே நடந்திருக்கிறது.

 கடன்

கடன்

அந்தவரிசையில், காஞ்சிபுரம் அருகே உள்ள‌ வாலாஜாபாத்திலும் ஒரு கந்துவட்டிக் கொடுமை நடந்துவருகிறது. வாலஜாபாத் ராஜவீதியைச் சேர்ந்த‌ பத்மாவதி, சிற்பத் செய்யும் தொழில் செய்கிறார். திருமுக்கூடலைச் சேர்ந்த பார்கவி என்ற பெண்ணிடம், பத்மாவதி தொழிலை விரிவுப்படுத்த கடந்த 2019ல், ஆறு லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். பார்கவியிடம் வாங்கியக் கடனுக்கு பத்மாவதி சரியாகவே வட்டி கட்டி வந்திருக்கிறார். பார்கவி இரண்டு பைசா வட்டிக்குத்தான் கடன் கொடுத்திருக்கிறார். திடீரென அந்த வட்டியை ஆறு பைசாவாக உயர்த்தி இருக்கிறார். இனி ஆறு பைசாவே வட்டி கொடுக்க வேண்டும் என்று பார்கவி வற்புறுத்தியுள்ளார். மிரட்டலால் அதையும் வட்டியாகக் கட்டிவந்தார் பத்மாவதி.

 சீட்டு

சீட்டு

வட்டி கட்டிவந்த சூழ்நிலையில், தன்னிடம் சீட்டு கட்டுமாறு பார்கவி கூறியிருக்கிறார். பத்மாவதியும் சீட்டுக் கட்டி வந்தார். ஒரு சமயத்தில் வட்டியும் சீட்டும் கட்டவே வரும் பணமெல்லாம் போக, என்ன செய்வதென தவித்தார் பத்மாவதி. ஒருகட்டத்தில், சீட்டுப்பணத்தை எடுத்து வட்டி கட்டினார். வட்டி வளர்ந்து நாள் வட்டி வரை சென்றது. தவித்துப்போனார் பத்மாவதி.

 மிரட்டல்

மிரட்டல்

வாங்கிய ஆறு லட்ச ரூபாய்க்கு பத்மாவதி இதுவரை 14 லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறார். என்ன நினைத்தாரோ பார்கவி, தன்னிடம் வாங்கிய அசல் தொகையை உடனே கட்ட வேண்டும் என நெருக்கடி கொடுத்தார் பத்மாவதிக்கு, பணம் கட்டவில்லை என்றால், பத்மாவதியின் மகளைக் கடத்திவிடுவதாக பார்கவி மிரட்டல் விடுத்தார். பார்கவியின் மிரட்டலைத் தொடர்ந்து, இனியும் கந்துவட்டிக் கொடுமையை தாங்க முடியாது என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

விசாரணை

விசாரணை

கணவன் மற்றும் மகளுடன் சென்று கந்துவட்டிக் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாரும் மிரட்டல் விடுக்கும் பார்கவி மீதும் புகாரளித்துள்ளார். இதையடுத்து இந்தபுகாரின் அடிப்ப‌டையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+