புதுசு புதுசா கிளப்பாதீங்க.. கோயில்களுக்கு ஹலால் நெய் விற்பனை?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி
சென்னை: திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாடு, பன்றி உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஆவின் தயாரிப்பில் ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்தி வதந்தி என்று உண்மை சரிபார்ப்பகம் குழு தெரிவித்துள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி கூறியிருந்தார்.
இதற்கிடையே, குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
திருப்பதியில் புரட்டாசி மாதம் பிரம்மோத்சவ நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மகாசாந்தி யாகம் நடத்தி கோவிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக திருப்பதி கோயிலில் சாந்தி யாகம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 'சாந்தி யாகம்' நடத்தப்பட்டது.
இதற்கிடையே, கோயில்களுக்கு ஆவின் தயாரிப்பில் ஹலால் நெய் விற்பனை செய்யப்படுகிறது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், கோயில்களின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகி வருகிறது என்றும் சமூக வலைதள வாசிகள் குமுறி வந்தனர். அரசு நிர்வகித்தால் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடைபெறும். உண்மையான பக்தர்களே கோயில்களை நிர்வகிக்க வேண்டும் என்றும் ஒருதரப்பினர் குமுறி வருகின்றனர்.
இந்நிலையில், ஆவின் தயாரிப்பான ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்த செய்தி வதந்தி என்று உண்மை சரிபார்ப்பகம் குழு தெரிவித்த இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் 15க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அரபு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் பொருள்களில் மட்டுமே ஹலால் முத்திரை இடம்பெற்றிருக்கும்.
ஆனால், தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது. ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications