விவசாயிகளே நல்ல செய்தி.. மாடு வளர்க்குறீங்களா.. ஆவின் எடுத்த சூப்பர் முடிவு
சென்னை: கறவை மாடுகள் மற்றும் பால் முகவர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. அதற்காக பால் முகவர்களை அழைத்து ஆலோசனை நடத்தவும் ஆவின் திட்டமிட்டுள்ளது.
கறவை மாடுகள் திடீரென இறந்து போனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக சிறிய அளவிலான பால் உற்பத்தி செய்யும் குடும்பத்தினர், கறவை மாடுகள் வாங்க வசதி இல்லாமல் அந்த தொழிலையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மேலும் கால்நடைகள் இழப்பால் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு பெரிய இழப்பும் ஏற்படுகிறது. அந்த இழப்பில் இருந்து மீண்டுவர வேண்டும் என்றால், கறவை மாடுகள் வாங்க கண்டிப்பாக பணம் வேண்டும். எனவே இப்படியான சூழலில் கறவை மாடுகள் மற்றும் பால் முகவர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தற்போதைய நிலையில் கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில், பசு, எருமை, ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவற்றுக்கு காப்பீடு செய்யப்படுகிறது,
இந்நிலையில், கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதற்கான செயல்முறை பணியை மேற்கொண்டு வருகிறது. காப்பீடு கட்டணமாக, ரூ.600 முதல் ரூ.700 வரை வசூல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில், 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் இந்த மானியத்தை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மாடு வளர்க்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். நடப்பாண்டு, 50 சதவீத கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கறவை மாடுகளுக்கு காப்பீடு தருவது குறித்து ஆவின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நந்தனத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தான் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆவின் பால் முகவர்களுக்கும் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்க அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வங்கிகளிடம் கருத்து கேட்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே முதல்கட்டமாக, சென்னையில் உள்ள பால் முகவர்களை அழைத்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications