வரமுடியாது.. திடீர்ன்னு போன் போட்ட ஓ.பி.எஸ்.. போரூரில் விக்கித்து நின்ற அதிமுக.. பரபரத்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களுக்கு இடையே நேற்று போரூரில் நடந்த சம்பவம் ஒன்று அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மிக தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. பாமக, பாஜக என்று பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிமுக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.

இதுவரை பிரச்சார களத்தில் திமுகவை விட அதிமுக ஒருபடி மேலேதான் இருக்கிறது. முக்கியமாக முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் சுழன்றடித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர்

இந்த நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் திருவள்ளூர் சென்று இருந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகளில் அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 9.30 மணி வரை இந்த பிரச்சாரம் நீண்டது.

பிரச்சாரம்

பிரச்சாரம்

நேற்று திட்டப்படி திருவள்ளூர் சென்றுவிட்டு ஓ.பன்னீர்செல்வம் போரூர் செல்ல வேண்டும். சென்னை போரூரில் மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச வேண்டும். இதற்காக போரூரில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்திற்காக அதிமுக தொண்டர்களும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

தொண்டர்கள்

தொண்டர்கள்

இந்த கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருவார் என்று அதிமுக நிர்வாகிகள் கால்கடுக்க காத்து இருந்தனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இரவு 9 மணி தாண்டியும் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வருவதாக தெரியவில்லை. பிரச்சாரத்தை ஏற்பாடு செய்த அதிமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் பாமக வேட்பாளர் ராஜமன்னார் ஆகியோர் இதனால் பதற்றம் அடைந்துள்ளனர்.. என்ன துணை முதல்வர் இன்னும் வரவில்லையே என்று பதற்றம் அடைந்துள்ளனர்.

போன் கால்

போன் கால்

அப்போதுதான் ஓ.பி. எஸ் தரப்பில் இருந்து இவர்களுக்கு போன் வந்துள்ளது. அதில் திருவள்ளூர் பிரச்சாரம் இன்னும் முடியவில்லை. மீட்டிங் இங்கு முடியவே 9.30க்கு மேலாகிவிடும். போரூர் வருவதற்கு 10.30க்கு மேலாகிவிடும். அதனால் இன்று கூட்டம் நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.

கூட்டம்

கூட்டம்

இதையடுத்து ஓ.பி.எஸ் வரவில்லை என்ற செய்தி அதிமுக தொண்டர்களிடம் சொல்லப்பட்டது. இதை கேட்டு அங்கு காத்திருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்பே அங்கிருந்த தொண்டர்கள் கலைந்து சென்றனர். இந்த கூட்டம் இன்று போரூரில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இன்று ஓ.பி.எஸ் இங்கு பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+