காலங்காத்தாலே எச்.ராஜாவுக்கு வந்த திடீர் சந்தேகம்.. "வெள்ளையா.. மஞ்சளா".. ட்விட்டரில் ஒரே பரபரப்பு
வெள்ளை அறிக்கை குறித்து எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு ஒரு முக்கியமான சந்தேகம் எழுந்துள்ளது.. இதுகுறித்து ட்வீட் ஒன்றினை பதிவிட்டு, "நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 10 வருடத்துக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார்..
இதை பற்றி செய்தியாளர்களிடம் பிடிஆர் பேசும்போது, "தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொதுசந்தா கடன் 2.63 லட்சமாக இருக்கிறது..

நிதிபற்றாக்குறை
தமிழகத்தின் மொத்த கடன் 5.24 லட்சம் கோடியாகவும், தமிழகத்தின் மொத்த நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறையில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது கிடையாது.. இதெல்லாம் கொரோனா வருவதற்கு முன்னாடியே, இந்த சரிவு தொடங்கிவிட்டது" என்றார்.

வெள்ளை அறிக்கை
பிடிஆரின் இந்த வெள்ளை அறிக்கை மிக முக்கிய திருப்பத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.. அந்த வெளியான வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரின் கருத்துக்களை தெரிவித்தனர்.. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் கருத்து தெரிவித்திருந்தது.. முக்கியமாக, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து பரபரப்பாக பார்க்கப்பட்டது.

கருணை தொகை
''தமிழகத்தின் நிதிநிலை, நிதிச்சுமையைச் சமாளிக்க அறிக்கை மட்டுமே போதாது.... சீர்திருத்தங்களும் தேவை... கவலை தரக்கூடிய வெள்ளை அறிக்கை அதிர்ச்சியுடன் சிந்திக்க வைக்கிறது... இலவச, கருணைத்தொகைகளை ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்... அனுபவமிக்க நிதியமைச்சர் மற்றும் பொருளாதாரக் குழு இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்... இருட்டை இகழ்வதைவிட வெளிச்சத்தைத் தூண்டுவதே நல்லது என்பதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும்'' என்றார்.

விமர்சனம்
அதாவது அதிமுகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஆக வேண்டிய வேலையை பாருங்கள் என்பது போன்ற அர்த்தத்தில் சொன்னதாகவே அது தெரிகிறது. ஆனால், திமுக கூட்டணியோ இந்த வெள்ளை அறிக்கையை வேறு விதமாக அணுகியது.. அதிலும் கம்யூனிஸட் கட்சி அதிமுகவை, பாஜகவை நேரடியாகவே குற்றஞ்சாட்டியது.. முத்தரசன் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்..

வலிமையற்ற அரசு
அதில், "பாஜக ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறித்து வருகிறது... அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் வலிமையற்ற அரசாக அதிமுக செயல்பட்டது என்று குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது... அதிகாரத்தில் இருந்தவர்கள் சுயநல ஆதாயம் தேடுவதில் குறியாக இருந்தார்கள் என்பதை வெள்ளை அறிக்கை உறுதி செய்துள்ளது... அரசியல் உறுதியும், நிர்வாகத் திறனும் இல்லாத அதிமுக ஆட்சியின் பொறுப்பற்ற செயல்பாடுகளே இந்த நெருக்கடிக்கு காரணமாகும் என நிதியமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்" என்று கூறியிருந்தார்.

ட்வீட்
இப்படி ஆதரவும், எதிர்ப்புமாக வெள்ளை அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவும் தன் பங்குக்கு இதைக் கலாய்த்துள்ளார்.. நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?" என்று கேள்வி எழுப்பி ட்வீட் போட்டுள்ளார்.. எச்.ராஜாவின் இந்த சந்தேகத்துக்கு ஏகப்பட்ட பதில்களை ட்விட்டர்வாசிகள் தந்து கொண்டிருக்கிறார்கள்..

கமெண்ட்கள்
அதில் ஒருவர், "அவங்க அப்படி பண்ணதுக்கு முக்கிய காரணமே நீங்கதான்.. நாலு வருஷமா சட்டசபையில் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய அதன் விளைவுதான் நிதி நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை ஆட்சி மாற்றம்தான் ஊழல் பெருச்சாளிகளை கண்டுபிடிக்க உதவி செய்தது என்று விளக்கம் தந்துள்ளார்.. இன்னொருத்தரோ, "மோடி ஜீ சொன்ன 15 லட்சம் வந்தவுடன் இந்த 2.6 லட்சம் கடனை அடைத்துட்டு மீதத்தை என்ன பண்ணுறதுனு தெரியவில்லை" என்று பதில் சொல்லி உள்ளார்.. ஆக மொத்தம் எச்.ராஜாவின் ட்விட்டர் காலையில் இருந்து பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
புதுச்சேரி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.. முடிவுக்கு வருமா தொகுதி பங்கீடு? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications