திடீர்னு முளைத்த 4 "தாமரைகள்".. ஆனால் இதுக்கெல்லாம் காரணம் யார்னு தெரியுமா?
தமிழக பாஜக 4 சீட்களில் வெல்ல காரணமே தமிழிசைதான்
சென்னை: தாமரை 4 தொகுதிகளில் மலர்ந்துள்ளது.. இது யாருமே எதிர்பாராத ஒன்று.. தமிழக பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.. ஆனாலும் இந்த வெற்றிக்கான விதையை போட்டவரை அவ்வளவு சீக்கிரம் பாஜக மறந்துவிட முடியுமா என்ன?!
Recommended Video
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் சொல்லின.. இதையேதான் வாக்குப்பதிவு அன்றைய தினமும் சொல்லப்பட்டது.. இதையேதான் எக்ஸிட் போல்களும் சொல்லின.
வேண்டுமானால், 4 இடங்களில் டஃப் தருவார்களே தவிர, வெற்றி பெறுவது கஷ்டம் என்றார்கள்.. அரசியல் நோக்கர்கள் இதையேதான் சொன்னார்கள்.. ஆனால், இன்றைய தினம் பாஜகவின் 4 தொகுதி வெற்றியானது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

காரணம்
இதற்கு காரணம், 20 வருஷமாக ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத கட்சி அது.. வாக்கு வங்கியைகூட நிலையாக வைத்திருக்காத கட்சி.. 2 சதவீத ஓட்டு வங்கி இல்லாத தேசிய கட்சி.. நோட்டாவுக்கும் கீழே ஓட்டுக்களை பெறக்கூடிய கட்சி, என்றெல்லாம் விமர்சனங்களுக்கு பஞ்சமில்லாமல் ஓடியது.

நயினார் நாகேந்திரன்
ஆனால், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு தேசிய கட்சியாக இருந்தாலும், திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலில் பாஜக உள்ளது..

பாஜக
திராவிட கட்சிகளுக்கு மாற்று தாங்கள் தான் என்று பாஜக சொன்னாலும், திராவிட கட்சிகளை பகைத்து கொண்டு, இங்கு தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், எங்கோ அடிபாதாளத்தில் தொங்கி கொண்டிருந்த பாஜகவை, தமிழகம் முழுக்க கொண்டு போய் சேர்த்த பெருமை டாக்டர் தமிழிசை சவுந்தராஜனையே சாரும்.. தமிழக பாஜகவுக்கு தமிழிசை செய்த பணிகள் அளப்பரியது..

இன்முகம்
அவர் மீது வீசப்பட்ட சொல்லடிகளும், வார்த்தை தாக்குதல்களும் ஏராளம்.. தனி நபர் விமர்சனங்கள் தமிழிசை மீது வீசப்பட்டன.. அனைத்தையும் அன்று இன்முகத்துடன் ஏற்று கொண்டவர் தமிழிசை. இந்த அளவுக்கு பக்குவத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் மகளை வளர்த்த பெருமை குமரியாருக்கே போய் சேரும். இன்று தமிழிசை இல்லாத இந்த தமிழகம் வெறிச்சோடிதான் போயுள்ளது..

4 தாமரைகள்
இந்த திராவிட மண்ணில் தாமரை ஒருபோதும் மலராது என்ற திட்டவட்ட நிலையில், "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வாசகத்தை ஒவ்வொரு தெருக்களிலும் போய் ஒப்படைத்தது தமிழிசைதான்.. இன்றைய வெற்றியானது பாஜகவிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருப்பதையே எடுத்து காட்டுகிறது... அப்படி ஒரு வளமான எதிர்காலம் பாஜகவுக்கு தொடர்ந்து அமையுமானால், அதற்கு தமிழிசை ஆழமாக விதைத்த விதைதான் காரணம் என்பதை பாஜக மறக்க கூடாது.. மறந்துவிடவும் முடியாது.. மறந்துவிடவும் கூடாது..!
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications