தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? வெளியானது பரிந்துரை
சென்னை: தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம் என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் தமிழகப் பிரிவு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில் உள்ள கட்டண விவரங்களை பார்ப்போம்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம் என்பது குறித்து ஐஎம்ஏ தமிழகப் பிரிவு தனியார் மருத்துவமனைகளுடன் ஆலோசனைக்கு பின்னர் பரிந்துரை வெளியிட்டுள்ளது.
இதன்படி. லேசான மற்றும் மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு 10 நாட்களுக்கு சிகிச்சை கட்டணம் ரூ.2,31,820 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மேலும் மிதமான கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ.23000 வரை வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்களின் கட்டணம் அடக்கம் இல்லை.
Tamil Nadu branch of Indian Medical Association has submitted draft tariff structure for Covid-19 treatment at private hospitals. Govt decision expected soon. pic.twitter.com/p2KrXTXm28
— Shilpa Nair (@NairShilpa1308) June 4, 2020
தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 17 நாட்களுக்கு ரூ.4,31,411 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு நாளைக்கு தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு ரூ.43000 வசூலிக்க பரிந்துரைத்துள்ளது,
அனைத்து வகை கொரோனா நோயாளிகளுக்கும் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9600 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை தமிழக அரசின் பரிசீலனைக்கு ஐஎம்ஏ தமிழக பிரிவு அனுப்பி வைத்துள்ளது. இதை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது.
Recommended Video
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications