சசிகலா, விஜயபாஸ்கருக்கு “சிக்கல்”! விரட்டும் ஜெயலலிதா மரண வழக்கு.. தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையின்படி, சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், சிவகுமார் ஆகியோரிடம் விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாக சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்டு 30 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் கூடியது.
இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

கூட்டம் நிறைவு
இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முக்கிய முடிவுகளுடன் நடந்து முடிந்தது. இதில், ஆன்லைன் ரம்மி தொடர்பாக இயற்றப்படும் அவசர சட்டம் நீதிமன்றம் சென்று தடை பெறமுடியாத அளவுக்கு இருக்கும் வகையில் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அறிக்கை
அதேபோல், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கைகைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்
கடந்த 2016 ல் தமிழ்நாடு முதலமைச்சராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் விசாரணை நடத்த அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. பல்வேறு கால நீட்டிப்புக்கு பின் விசாரணை அறிக்கையில் சமீபத்தில் ஆறுமுகசாமி அரசிடம் தாக்கல் செய்தார்.

அறிக்கை சமர்பிப்பு
மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 22.09.2016 அன்று மருத்துவமனையில் குறித்து அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத் தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட மாண்புமிகு நீதியரசர் திரு.அ.ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையத்தால் 27.08.2022 அன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையும் அமைச்சரவையின் முன்வைக்கப்பட்டது.

சசிகலாவிடம் விசாரணை
இவ்வறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருமதி V.K.சசிகலா, திரு சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications