காமுக சாமியார் சிவசங்கர் பாபா உதவியாளர் பாரதி வெளிநாடு தப்பி ஓட்டம்- மற்றொரு ஆசிரியை தீபா தலைமறைவு
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவின் கூட்டாளிகளாக செயல்பட்ட ஆசிரியைகள் பாரதி, தீபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Recommended Video
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளிக் கூடத்தை சர்ச்சை சாமியார் சிவசங்கர் பாபா நடத்தி வந்தார். இவர் மீது நீண்டகாலமாகவே பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தது.

சிவசங்கர் பாபா லீலைகள்
சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அம்பலமானது. இதனையடுத்து சுஷில் ஹரி பள்ளியில் சிவசங்கர் பாபா நடத்திய லீலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன.

டேராடூன் தப்பி ஓட்டம்
இதனால் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு தப்பி ஓடினார் சிவசங்கர் பாபா. அவரை கைது செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் டேராடூன் சென்றனர். ஆனாலும் மொட்டையடித்து கொண்டு மாறுவேடத்தில் தப்பினார் சிவசங்கர்.

சுற்றி வளைத்து கைது
அவர் வெளிநாடு தப்பக் கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸும் வெளியிடப்பட்டது. பின்னர் ஒருவழியாக டெல்லி எல்லையில் சிவசங்கர் பாபா சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சிவசங்கர் பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவசங்கர் பாபா கூட்டாளிகள்
இதனிடையே சிவசங்கர் பாபாவின் கூட்டாளிகளாக இருந்த சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் பாரதி, தீபா இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பாரதி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

தப்பி ஓடிய தீபா
சென்னையில் இருந்த தீபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் தீபாவும் தற்போது தப்பி தலைமறைவாக இருக்கிறார். இந்த இரு கூட்டாளிகளையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications