தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க.. களமிறங்கிய ஸ்டாலின்.. வருகிறது நடமாடும் காய்கறி கடை
சென்னை: தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளின் விலைகளுமே உச்சம் தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அச்சமடைந்துள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் 300 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
காய்கறி விலை கடந்த 15 நாட்களாகவே உச்சத்தை தொட்டுள்ளது. தக்காளி, சின்ன வெங்காயம் மட்டுமல்லாது பச்சை, மிளகாய், இஞ்சி உள்ளிட்ட பல காய்கறிகளின் விலையை கேட்பதற்குக் கூட பயமாக இருக்கிறது. தக்காளி சட்னி, சின்ன வெங்காயம் சாம்பார் என்று சொல்லக்கூட இல்லத்தரசிகள் அஞ்சுகின்றனர். இதற்கு மாற்றாக என்ன சேர்த்து சமைக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர் இல்லத்தரசிகள்.

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை நேற்று கிலோ ரூ.110 ஆக உயர்ந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளது, அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தக்காளி, சிறிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இப்போது தக்காளி சிறிய வெங்காயம் போன்ற பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பல்வேறு துறையை சார்ந்த நீங்கள் உங்கள் துறை மூலமாக அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு அங்காடிகளிலும், நியாய விலை கடைகளிலும் சந்தை விலையை விட குறைவாக விற்க ஏற்பாடு செய்திட வேண்டும். தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பொருள் காவல் துறையினர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாக அரசின் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள், அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், நியாய விலைக் கடைகளிலும், சந்தை விலையை விட குறைவாகக் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.
அதேசமயம், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் கடுமையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இதில் கூடுதல் கவனம் செலுத்திடவும் கேட்டுக் கொண்டார். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். காய்கறி விலை உயர்ந்தாலும், அதன் பலன் நேரடியாக விவசாயிகளுக்கு செல்லவில்லை. இதனை சரி செய்ய உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் பெரிதும் உதவும். எனவே வேளாண் துறை இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல் நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போது பெருமளவு மாநகராட்சி மற்றும் தோட்டக் கலைத் துறை மூலம் தொடங்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications