கிளாம்பாக்கத்தில் இறங்கிய தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா.. மழைநீர் வடிகால் பணிகளை வேகமாக முடிக்க ஆர்டர்!
சென்னை: சென்னை, தாம்பரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக வேகமாக முடித்திட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 464 படுக்கைகளைக் கொண்ட பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு தாம்பரம், வார்டு-48க்குட்பட்ட காளிதாசர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ். ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் 1.25 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையின் தரம் மற்றும் அதன் அளவீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் அருகில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடித்திடவும், மழைநீர் வடிகாலுக்கான இணைப்பினை ஏற்படுத்திடவும், உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்கொள்ளவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலர் மேற்கொண்ட ஆய்வின்போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங், சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications