கொடநாடு விவகாரத்தில் முதல்வருக்கு தொடர்புள்ளதா? சந்தேகம் வருகிறது.. டிடிவி தினகரன் பரபர பேட்டி!
கொடநாடு விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில ஆவணங்களை வெளியிட்டார்.

அதில் இருந்து தொடங்கிய பரபரப்பு இப்போதுவரை முடியவில்லை. மேத்யூஸ் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையை பார்க்கும் பொழுது அதில் அவருக்கு தொடர்பு இருக்கும்போல் தெரிகிறது. குற்றம் சாட்டியவர்களையே கைது நடவடிக்கை எடுத்திருப்பதும் சந்தேகம் அளிக்கிறது.
சென்னை ஹைகோர்ட் நீதிபதி கூட இவர்களை சிறைக்கு அனுப்பவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய காலம் விரைவில் வரும் அப்போது உண்மை தெரியவரும்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி கூட்டணி வைத்து போட்டியிடும். இதற்காக சில மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அமமுக தனித்துப் போட்டியிடும்.
எங்களுக்கு வெற்றிவாய்ப்பு நன்றாக உள்ளது. நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications