நெல் கொள்முதல் பணிகள்.. டக்குனு போனை போட்ட முதல்வர் ஸ்டாலின்.. அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கும் நிலையில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் கொண்டு வந்தார்.
சமீபத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை பட்ஜெட்டில் வேளாண்மைக்கு புத்துயிர் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுவதுடன் நின்று விடாமல் அதன் பணிகள் முறையாக நடக்கிறதா என்று அதிகாரிகள், அமைச்சர்களிடம் அடிக்கடி கேட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

அடிக்கடி ஆய்வு
இது தவிர பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து அவர் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் காவல்துறை உள்ளிட்ட சில துறைகளில் நேரடியாக ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் பணிகளை முடுக்கி விட்டார். அதிகாரிகளையும் உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் குறுவை நெல் கொள்முதல் பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டும் என்று கொள்முதல் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆய்வுக் கூட்டம்
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7.10.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொள்முதல் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், தற்போது தமிழ்நாட்டில் குறுவைப் பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, அப்பணிகளை ஆய்வு செய்தார்.

கொள்முதல் பணிகள்
மேலும், டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய கொள்முதல் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். குறுவைப் பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தற்போது 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 1-10-2021 முதல் 6-10-2021 வரையில் 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் அனுப்பி வைப்பு
தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், கொள்முதல் பணிகள் சிறப்பாக நடப்பதை உறுதி செய்யவும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இப்பணிகளை மேற்பார்வை இடுவதற்காக, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications