ரேஷன் பொருட்கள் தரமாக இருக்கணும்.. புகார்களே வரக்கூடாது.. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆர்டர்!
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
குடும்ப அட்டை வழங்குதல், உணவு பொருட்கள் விநியோகம், சிறப்பு பொது விநியோக திட்டம், ரேசன் கடைகளை கணிணி மயமாக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதேபோல் ரேஷன் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், எடைக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டும், ரேஷன் கடைகளை கணினிமயமாக்க வேண்டும். குடும்ப அட்டைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத் திறனாளிகள், உள்ளிட்டடோருக்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடன் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications