திருப்பூருக்கு ஜாக்பாட்.. ரூ.1,427 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.1,427 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.949 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த ஸ்டாலின், ரூ.182 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.295 கோடியில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
திருப்பூர் மடத்துக்குளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையையும், கோவை பொள்ளாச்சியில் காமராஜர் உள்ளிட்டோரின் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை கோவைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் இருந்து வேன் மூலமாக பொள்ளாச்சி வழியாக திருப்பூர் மாவட்டம் உடுமலை வந்தார்.

அப்போது திருப்பூர் தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கருப்பு, சிவப்பு நிற பலூன்களை கையில் ஏந்தியபடியும், வரவேற்பு பதாகைகளை ஏந்தியபடியும் தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பெண்கள் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர்.
கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தாராபுரம் சாலையில் உள்ள ஈஸ்வர சாமி எம்.பி.யின் உறவினர் வக்கீல் சிதம்பரசாமி வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ரூ.949 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த ஸ்டாலின், ரூ.182 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.295 கோடியில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து திருப்பூர் மடத்துக்குளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையையும், கோவை பொள்ளாச்சியில் காமராஜர் உள்ளிட்டோரின் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 3.30 மணிக்கு விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு வருகிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1,427 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். இன்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
* திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசின் சாதனைகள்
* 5.4,904 கோடியில் 57,26,750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
* 5,587 கோடியில் 65,847 வளர்ச்சித் திட்டப் பணிகள்
* மொத்தம் 5. 10,491 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* இலவச வீட்டுமனை பட்டாக்கள், ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல ஆணைகள், மகளிர் திட்டம், தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஸ்டாலின் வருகையையொட்டி உடுமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications