Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிஎஸ்டி வரியை 8 ஆண்டுகளுக்கு முன்பே குறைக்காதது ஏன்? நாங்கதான் அப்பவே சொன்னோமே! ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டியை 8 ஆண்டுகளுக்கு முன்பே ஏன் குறைக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதைத்தானே எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்தோம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?

mk stalin narendra modi gst

வரிக் குறைப்பு

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.

நிதி தர மறுக்கும் பாஜக அரசு

மற்றொரு புறம், மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

மாநில அரசுகளை தண்டிப்பதா

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்! என ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அறிவிப்பு

ஜிஎஸ்டி வரி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். ஜிஎஸ்டியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களிலும் பாஜக ஆளாத மாநிலத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தனர்.

கார் விலை குறைவு

இந்த நிலையில் இந்திய நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஏற்கெனவே 5, 12, 18, 28 ஆகிய சதவீதங்களில் இருந்த ஜிஎஸ்டி வரியை இரு பிரிவுகளாக குறைத்தது மத்திய அரசு.

அதாவது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரு முறைகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளித்தது. அது போல் சிகரெட், புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு 40 சதவீதம் சிறப்பு வரியையும் விதித்தது.

இந்த வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் கார், பைக்குகள், வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவித்ததும் பலர் காருக்கு செலுத்திய முன்பணத்தை திரும்ப பெற்றனர். தற்போது ஜிஎஸ்டி குறைந்துள்ளதால் கார் ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு கார் மீதும் 20 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+