நொடிக்கு நொடி.. கரண்ட் பில் கட்ட போறீங்களா? மின்சார வாரியம் புது அதிரடி பாருங்க.. மெசேஜ் வந்துருமாமே
சென்னை: தமிழக மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதற்கான புதிய முறையை தற்போது அறிமுகம் செய்துள்ளது.. இந்த புதிய முறைப்படி, எப்படி கரண்ட் பில் கட்டுவது தெரியுமா?
சமீபகாலமாகவே, வீடுகளில், கரண்ட்பில் ரீடிங் எடுப்பதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.. அதனால்தான், இம்முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளன..

ஸ்மார்ட் மீட்டர்: அதேபோல, முறைகேடாக காட்டும் மீட்டர்களுக்கு முடிவுகட்ட வீடுகளில், "புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை" இணைக்கும் திட்டமும் கைவசம் உள்ளது... வீடுகளில் ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம். இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதையும் நம்மால் அறிந்து கொள்ளலாம்
இதற்கு நடுவில் இன்னொரு வசதியை மின்வாரியம் செய்து தரப்போவதாக சொன்னார்கள்.. பொதுவாக, மின் ஊழியர்கள், வீடுகளில் வந்து ரீடிங் எடுத்துவிட்டால், அதற்கு பிறகு, தங்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வது வழக்கம்.. பிறகு அடுத்த சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
கரண்ட் பில்: ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்கவே, புது "மொபைல் செயலி" நடைமுறைக்கு வரப்போவதாக 3 மாதங்களுக்கு முன்பேயே தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி, உங்கள் கரண்ட்பில் குறித்த அப்டேட், அடுத்த நொடியே, உங்களுக்கு மெசேஜ் மூலமாக கிடைத்துவிடுமாம். இந்நிலையில், செல்போனில் மெசேஜ் மூலமாகவே கரண்ட் பில் கட்டும் வசதியை மின்வாரியம் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. செல்போனுக்கு அதிகாரப்பூர்வமான மெசேஜ் வந்ததுமே, நீங்கள் மின்கட்டணத்துக்கான தொகையை எளிதாக செலுத்திவிடலாம்.
வாட்ஸ்அப்: உங்கள் வாட்ஸ்அப்புக்கு வரும் மெசேஜில் லிங்க் ஒன்று தரப்பட்டிருக்கும்.. அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.. பிறகு, அதனருகில் உள்ள பெட்டியில் கேப்சா எண்ணை உள்ளிட வேண்டும்.. இப்போது கட்டணம் செலுத்தும் செயல்முறை ஆரம்பமாகும்..
கட்டணம் செலுத்தும் பக்கம் திறந்ததுமே, அதில் நீங்கள் எந்த வகை மின்கட்டணத்தை செலுத்த உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்து அதன்பிறகு, மின்கட்டணத்தை செலுத்திவிடலாம்.. இதன்மூலம் எளிதில் மின்நுகர்வோர் தங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளும் நடந்து முடிந்துவிட்டால், கரண்ட் பில் கட்டுவது மேலும் எளிதாகிவிடும் என்று நம்பப்படுகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications