பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் பறக்கும் படையிடம் சிக்கும் பணத்தை மீட்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்பித்தால் மட்டுமே அந்த பணத்தையும், பொருட்கள், நகைகளை பெற முடியும். தாரம் இல்லாமல் தகுந்த விளக்கம் தர முடியாவிட்டால் இன்கம்டாக்ஸ் விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அந்தப் பணம் அனுப்பப்படும்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல், அதாவது 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வாகன சோதனைகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்படும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் மட்டும் கணக்கில் வராத ரூபாய் 18 லட்சம் ரொக்கம் பிடிபட்டுள்ளது. சென்னை மாதவரம் பகுதியில் 46 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தேர்தல் பறக்கும்படையிடம் பணம், நகைகளுடன் சிக்கியுள்ளனர். அவர்கள் உரிய ஆவணங்கள் சமர்பித்தால் மட்டுமே அந்த பணத்தையும், பொருட்கள், நகைகளை பெற முடியும்.
தமிழ்நாட்டில் பறக்கும் படையிடம் சிக்கும் பணத்தை மீட்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் காலத்தில் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, விதிமீறி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்தால் அது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எதற்காக என்று பில் பேங்க் ப்ரூப் (bill, bank proof, GST bill) போன்ற ஏதேனும் ஆதாரம் காட்டினால் உரியவருக்கு திருப்பி தரப்படும். ஆதாரம் இல்லாமல் தகுந்த விளக்கம் தர முடியாவிட்டால் இன்கம்டாக்ஸ் விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அந்தப் பணம் அனுப்பப்படும்.
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனையில் கையகப்படுத்தப்படும் பணம் உள்ளிட்ட பொருட்களை விடுவிப்பதற்கு மாவட்டம்தோறும் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கும். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும். PARA-16 ரொக்க விடுவிப்பின்படி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், செலவினக் கண்காணிப்புக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் மாவட்டக் கருவூல அதிகாரி போன்ற மாவட்ட அளவிலான அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்டக் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கைப்பற்றப்படும் பணம் உள்ளிட்ட பொருட்கள் விடுவிப்பதற்கு பொதுமக்கள் மாவட்ட குறைதீர்க்கும் குழு அலுவலகத்தை நேரில் அனுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களுடைய பணம் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்லும்போது கீழ்க்கண்ட ஆவணங்களில் ஒன்றைக் கைவசம் வைத்திருப்பது அவசியம்:
1. வங்கிப் பணம் எடுத்த ரசீது
2. ஜிஎஸ்டி ரசீது
3. திருமணச் செலவு எனில் திருமண அழைப்பிதழ்
4. சொத்து விவகாரம் எனில் ஒப்பந்தப் பத்திரம்
மருத்துவ செலவுகளுக்காக எடுத்துச் சென்ற பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டால் பயம் வேண்டாம். அதை சட்டப்படி திரும்ப பெறலாம். பணத்தை திரும்ப பெற உடனே ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். மருத்துவமனையின் அட்மிஷன் ஸ்லிப், மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்சன், ஸ்கேன் அல்லது பரிசோதனை ரிப்போர்ட், நோயாளியின் ஐடி, உடன் செல்வோரின் ஐ.டி ,பணம் எதற்காக எடுக்கப்பட்டது என்ற விளக்க கடிதம் போன்ற ஆவணங்கள் இருந்தால் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு அதிகம்.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட 24 - 72 மணி நேரத்தில் நடக்கும் விசாரணையில் ஆவணங்கள் சரியாக இருந்தால் பணம் விடுவிக்கும் உத்தரவு தரலாம். அப்ரூவல் வந்த பிறகு Treasury அல்லது கலெக்டர் அலுவலகத்தின் மூலம் பணம் திரும்பத் தரப்படும்.












Click it and Unblock the Notifications