மின்சார வாரியம்.. உச்சத்தில் மின்கட்டணம்.. அமைச்சர்கள் சொன்னது போல செய்யல.. கோட்டைக்கு போன கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு கோரிக்கையும் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
10 வருடங்கள் கழித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த வருடம் செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வலுத்தது.. இதையடுத்து, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.. இதனையும் தமிழக அரசு அமல்படுத்தியது.

கட்டண உயர்வு: அதன்படி, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் அமலுக்கு வந்துள்ளது. இது வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்காக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் பெருத்த அதிருப்திக்கு ஆளானார்கள்..
விசைத்தறி தொழிலாளர்கள்: இவர்களின் கோரிக்கையை ஏற்று, மின்கட்டணம் குறைக்கப்பட்டது என்றாலும், விசைத்தறி மின் கட்டணத்தை கடந்த 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்கள் தரப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மின்கட்டணத்தை குறைக்கக்கோரி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகின்றன.. தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் 430 சதவீதமாக உயர்த்தப்பட்டதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன..
5 கோரிக்கைகள்: அத்துடன், உயர்த்தப்பட்ட 25 சதவீத பீக் ஹவர் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை குறைக்க வேண்டும், 12 கி.வாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ என்ற அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.
இதை வலியுறுத்தி, கடந்த மாதம் 25-ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்ட நிலையில், ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருந்தது. எனவேதான், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண முறைகளை மாற்றி அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
போராட்டம்: இதற்கு பிறகு, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தனர்.. ஆனால், இதுவரை கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லையாம்.. எனவேதான், இன்றையதினம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள்.
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் இந்த உண்ணவிரத போராட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்பதாக தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications