“எனக்கு போன் பண்ணுங்க”.. 24 மணி நேரமும் வேலை செய்ய ஆர்டர்.. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன தகவல்!
சென்னை : தனியாருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் மின் வாரியத்துடன் இணைந்து செயல்பட முழு ஒத்துழைப்பையும் மின் வாரியம் தரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அரசின் சேவை விரைந்து கிடைக்க தொழில் முனைவோர் அனைவரும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் வாரிய சொந்த உற்பத்தியை 50 விழுக்காடாக அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மின் தேவை ஒரு நாளைக்கு சராசரியாக 17,000 மெகாவாட் என்ற அளவில் இருக்கிறது. தேவைப்படும் மின்சாரத்தில் 25 விழுக்காடு மட்டுமே மின்வாரியம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.

முதல்வர் உத்தரவு
மேலும் பேசிய செந்தில் பாலாஜி, "மின் வாரியத்தின் சொந்த நிறுவு திறனை 32,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த முடியும். ஆனால் 7125 மெகாவாட் மட்டுமே மின்வாரியத்தின் சொந்த நிறுவு திறனாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 65,000 மெகாவாட் அளவு தமிழகத்தில் மின் தேவை உயரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மின் வாரிய சொந்த உற்பத்தியை 50 விழுக்காடாக அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கு தேவைப்படும் மின் தேவையை அரசும், மின்வாரியமுமே நிறைவேற்ற முடியும்.

அதிகாரிகளுக்கு ஆர்டர்
எனவே, 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மின் உற்பத்தியை அதிகரித்தால் மின் விநியோக கட்டமைப்பையும் அதிகரிக்க வேண்டும் என்பதால் கடந்த ஆண்டு காற்றாலை மூலம் உற்பத்தியான மின்சாரத்தில் 100% மின்சாரத்தை வீணடிக்காமல் பயன்படுத்தப்பட்டது. 105 மெகாவாட் அளவிற்கு சூரிய சக்தி , காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கால விரயமின்றி அனைவருக்கும் உடனுக்குடன் மின் வாரியம் மூலம் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

டெண்டர்
2030க்குள் உற்பத்தி செய்யப்படும் 20,000 மெகாவாட் மின்சாரத்தில் 6,000 மெகாவாட் மின்சாரம் சொந்த உற்பத்தி நிறுவு திறன் மூலம் உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 316 துணை மின் நிலையங்களுக்கு டெண்டர் விடும் பணிகள் நடக்கிறது. மக்களுக்கு தேவையான மின்சாரத்தை அரசே முழுவதுமாக உற்பத்தி செய்வதற்கான காலமும், நிதியும் போதாது.

தனியாருடன் சேர்ந்தால் தான்
எனவே, தனியாருடன் சேர்ந்து பணியாற்றினால் தான் தமிழக மக்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தனியார் நிறுவனங்கள் மின் வாரியத்துடன் இணைந்து செயல்பட முழு ஒத்துழைப்பையும் மின் வாரியம் தரும். தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 2030 வரையான காலகட்டத்திற்கு 17 விழுக்காடு இருக்கிறது. ஆனால், 43 விழுக்காடு இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

என்னை கூப்பிடுங்க
தமிழகத்தில் தற்போது மூன்றரை கோடி மின் நுகர்வோர் இருக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் மின் நுகர்வோர் அதிகரிப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசின் சேவை விரைந்து கிடைக்க தொழில் முனைவோர் அனைவரும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications