கொரோனா காலத்தில்.. திட்டமிடாத,அரைகுறையான திட்டங்களுக்கு அ.தி.மு.க ஒப்புதல்..பி.டி.ஆர் குற்றச்சாட்டு!
சென்னை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரைகுறையான திட்டங்களுக்கு கடந்த அ.தி.மு.க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சுமார் 3 மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துள்ளார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கிராமங்களில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் உள்பட பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பிடித்துள்ளது.

3 ஆண்டுகளாகும்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தகுதியானவர்களை கண்டறிந்து இந்த திட்டம் செய்லபடுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைய இன்னும் 3 ஆண்டுகளாகும் என்றும் அனைத்து திட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது என்றும் அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்தார். மேலும், கடந்த அதிமுக அரசின் நிதி செயல்பாட்டு முறை குறித்தும் பி.டி.ஆர் கடுமையாக விமர்சித்தார்.

அ.தி.மு.க அரசு
அப்போது அவர் கூறியதாவது:- நெடுஞ்சாலைத்துறை, நீர்ப்பாசனத்துறை மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தவறான நோக்கோடு, முழுமையாக திட்டமிடாத, அரைகுறையா பல்வேறு திட்டங்களுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் மூலதன செலவின் பொருளாதார ஊக்குவிப்பு என்கிற பெயரில் கடைசி நேரத்தில் தவறான எண்ணத்தில் முந்தைய அரசால் ஒப்பளிப்பு அளிக்கப்பட்டது.

கவனமாக ஆராய்வோம்
இத்தகைய திட்டங்களை நாங்கள் கவனமாக ஆராய்ந்துள்ளோம். விரிவான முறையில் செல்வீனம் பகுப்பாய்வு அடிப்படையில் உண்மையிலேயே பயன் தரும் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும். அதன் அடிப்படையில் மூல தன செலவீனங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 43,170.67 கோடி ரூபாய் திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் 4219.97 என சற்று குறைக்கப்பட்டது.
Recommended Video

நிதிப்பற்றாக்குறை
இந்த அடிப்படையில் 2021-22 ஆம் ஆண்டில் திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டு அடிப்படையில் நிதிப்பற்றாக்குறை 92529.43 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு பதிலாக திரும்ப செலுத்தும் கடனாக எதிர்ப்பார்க்கப்படும் 8095 கோடி ரூபாய் இந்த நிதிப்பற்றாக்குறையில் சேர்க்கப்படவில்லை. இந்தக்கடனை மாநிலத் தொகுப்பு நிதியிலிருந்து திரும்ப செலுத்தப்படவில்லை. இதை மத்திய அரசின் பொறுப்பிலுள்ள இழப்பீடு மேல்வரி நிதித்துறையிலிருந்து செலுத்தப்படும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications