அடிதூள்.. திமுக அரசின் மாஸ் அறிவிப்பு.. இலவச வீட்டு மனை.. வருமான உச்சவரம்பு உயர்வு.. யாருக்கெல்லாம்?
திருமண உதவி தொகை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
சென்னை: தையல் இயந்திரம், இலவச வீட்டு மனை உள்ளிட்ட நல உதவிகளை அரசிடமிருந்து பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலர்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அதேபோல, நரிக்குறவர், சீர் மரபினர்நல வாரியங்களில் வழங்கப்படும் திருமண உதவி தொகையை உயர்த்தி வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர் மரபினர் நல வாரியங்களில், பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு, திருமண உதவி தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது..

வீட்டு மனை
இந்த தொகையை ஆண்களுக்கு, 3,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வீட்டு மனை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது... பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை முதன்மைச் செயலாளா் ஆ.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:

மின்மோட்டார்
"இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பயனாளிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு கிராமப்புறங்களில் ரூ.40 ஆயிரமாகவும், நகர்ப்புறங்களில் ரூ.60 ஆயிரமாகவும் நிா்ணயிக்கப்பட்டது. இந்த வேறுபாடுகள் களையப்பட்டு ரூ.72 ஆயிரமாக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.

உத்தரவு
இந்த நிலையில், சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஆண்டு வருமான உச்சவரம்பு அளவை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி உத்தரவு வெளியிட வேண்டுமென மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரகம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

வீட்டுமனை
இதனை ஆய்வு செய்த அரசு, இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி, இலவச வீட்டு மனை ஆகியவற்றைப் பெறுவதற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பானது பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.. இதனால் பலரது வாழ்வாதாரம் காக்கப்படும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது..!
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications