பரபர வேகத்தில் ரெடியாகும் தமிழக அரசு.. 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்க உத்தரவு
சென்னை: 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அது போல் முகக் கவசம், பிபிஇ கிட்களையும் போதுமான அளவிற்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கி இருுப்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கொரோனா வார்டுகளில் படுக்கைகளை அதிகரிக்கவும் வேண்டும். கொரோனா தடுப்பூசி மையங்கள் முழுநேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் ஆகிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பிஎப் 7 எனும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

பிஎப் 7
இந்தியாவிலும் சிலருக்கு புதிய வேரியண்ட் பிஎப் 7 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பொது இடங்களில் முகக் கவசம் அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்
இந்திய அளவிலும் விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிய வேரியண்ட்டால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications