செம! போக்குவரத்து ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’.. ஊக்கத்தொகை + நிலுவைத்தொகை வழங்க முதல்வர் உத்தரவு!
சென்னை: கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடியும், ஊதிய நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடியை ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை. கொரோனா காலத்தில் தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்ததற்காக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழக்கப்படுகிறது. அதன்படி, சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.
கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியான பேருந்து சேவைகளுக்காக, பேருந்துகளை இயக்கின. அப்போது, போக்குவரத்துப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர்.
அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலத்திற்கு பின், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 14 வது ஊதிய ஒப்பந்தத்தை 01-09-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications