காலையிலேயே வந்த செம அறிவிப்பு.. ரூ.400 கூடுதலாக நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்! இந்த திட்டத்திற்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து 2010ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

tamil nadu government notification mk stalin chennai

அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 2021ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த நிலையில், அத்திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருவது கண்டறியப்பட்டது. குடிசை இல்லாத தமிழ்நாடு இலக்கை அடையும் வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முதல் கட்டமாக ரூ 3500 கோடி செலவில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக "அனைவருக்கும் வீடு" என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் "குடிசையில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 இலட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு. சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.135.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.995.61 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+