72 பக்க ஃபைல்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்த தங்கம் தென்னரசு.. ஸ்டாலினின் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசு சார்பில் 72 பக்க கோரிக்கை மனு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 Tn government gives 72 page memorandum to Union minister nirmala sitharaman

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத அதிகனமழையின் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, இந்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கனமழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்தும் கடுமையாக சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

 Tn government gives 72 page memorandum to Union minister nirmala sitharaman

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோரும் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதியின் முக்கிய தேவையை சுட்டிக்காட்டி ஒரு விரிவான 72 பக்க கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இதுகுறித்த தகவலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகம், கடந்த நூற்றாண்டில் 50 சூறாவளிகளை எதிர்கொண்டது. தொடர்ந்து அச்சுறுத்தலில் உள்ளது. மிக்ஜாம் புயலுக்குப் பின் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை, தமிழக அரசு மேற்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி கனிமொழி மற்றும் மூத்த அதிகாரிகள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விளக்கமளித்தனர்.

மேலும், வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதியின் முக்கிய தேவையை சுட்டிக்காட்டி ஒரு விரிவான 72 பக்க கோரிக்கை மனுவையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளனர். மாநில பேரிடர் மீட்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட அளவிலான நிதி மட்டுமே உள்ளது. அந்த நிதி வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க போதுமானதாக இல்லை. எனவே, இதுபோன்ற ஆபத்தான சவால்களை எதிர்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து போதுமான அளவு நிதி தேவைப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+