முட்டுக்காட்டில் மிகப்பெரிய பிளான்.. முதல்வர் ஸ்டாலினின் கனவு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

அதன் அடிப்படையில், 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், ரூ.102 கோடியிலும்; 10 ஆயிரம் பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும்; கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ரூ.106 கோடியிலும் அமைய உள்ளது. அமட்டுமல்லாது, இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவற்றுக்கான பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. 2025ஆம் ஆண்டு இறுதி அல்லது 2026ஆம் ஆண்டு தொடக்கத்திற்கு உள்ளாக இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, அங்கு இருப்பது போன்ற சிறப்பான வசதிகளுடன் தமிழ்நாட்டில் பன்னாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என விரும்பினார். அதன்படியே, உலகளாவிய தொழில் கண்காட்சிகள் - வர்த்தக மாநாடுகள் - தொழில்நுட்பக் கூட்டங்கள் - உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் - உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாகக் 'கலைஞர் Convention Centre' அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications