கலக்குதே தமிழக அரசு.. அனைத்து அலுவலகங்களிலும் இனிமேல் இது கட்டாயமாம்.. திடீர்னு வந்த அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் முதலுதவி பெட்டி இருப்பது அவசியம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காகவே பல்வேறு அதிரடிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.. பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பலன்தரத்தக்க நிறைய அறிவிப்புகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.
நிறுவனங்கள்: அந்தவகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கான புது அதிரடியை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, வணிக நிறுவனங்களில் கட்டாயமாக முதலுதவி பெட்டியை வைத்திருக்க வேண்டும், குறிப்பாக, ஒரு வணிக நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்தால் கட்டாயமாக முதலுதவி பெட்டியை அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது: "150 பேர் வரையிலான எண்ணிக்கையில் ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் பணியாளர்கள் பணிபுரிந்தால், அந்த இடங்களில் ஒரு முதலுதவி பெட்டியை வைக்க வேண்டும். இந்த பெட்டியை உரிய முறையில் பராமப்பதுடன், முறையாக கையாள வேண்டும். தனித்து தெரியும் வகையில் மாட்டியிருக்க வேண்டும்.
சிறுகாயங்கள்: சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில், அனைத்து மருந்துகளும், மருத்துவ கருவிகளும், முதலுதவி பெட்டியில் இடம்பெற்றிருக்க வேண்டும். அந்த முதலுதவி பெட்டியில் சாதாரண காய்ச்சல், சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் படியான அனைத்து மருந்துகளும் இருக்க வேண்டும். பொதுவான அனைத்து மருந்து மாத்திரைகளை எப்பொழுதும் இருப்பில் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசு விரைவு பஸ்களில், முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி மாதம், முதலுதவிக்கான பொருட்கள் வழங்கும் முறையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சில மாற்றங்களை செய்திருந்தது.
அதாவது, டிஞ்சர், பிளாஸ்டர், பொட்டாசியம் பெர்மாங்கனேட், அயோடின், பஞ்சு உள்ளிட்ட மருத்துவ உதவி பொருட்கள் அந்த முதலுதவி பெட்டியில் உள்ளன.. பயணியருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், இந்த மருந்து பொருட்களை பயன்படுத்தி முதலுதவி செய்யலாம்..
அறிவுறுத்தல்: ஆனால், பெரும்பாலான பேருந்துகளில், முதலுதவி பெட்டிகள் காலியாகவே இருப்பதாகவும், இதுகுறித்து புகார்கள் அதிகம் வந்ததாலும், முதலுதவி பெட்டிக்கான பொருட்களை, நடத்துனர்களின் பொறுப்பில் எடுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது. ஷிப்ட் முடிந்து கேஷ் கவுண்டரில் கணக்கு முடிக்கும்போது, இந்த பொருட்களையும் ஒப்படைத்து, அடுத்த ஷிப்ட் நடத்துனரிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.. இந்த நடைமுறைதான் இப்போது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications