Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எண்ணூரில் வாயுக் கசிவு.. கோரமண்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூரில் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனம் திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் கிராமத்தில் உள்ளது.இந்த நிறுவனம் உரத்தொழிற்சாலையையும் அமோனியா சேமிப்பு தொழிற்சாலையையும் இயக்கி வருகிறது. இந்த ஆலை கடற்கரையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

TN government orders to close the Ammonia gas leakage

அதில் கப்பல்களில் கொண்டு வரப்படும் திரவ அமோனியா ரசாயனம் கொண்டு வரப்பட்டு கிடங்கில் சேமிக்கப்படுகிறது. கடலுக்குள் அடியில் 500 மீட்டர் ஆழத்தில் இந்த குழாய் உள்ளது. இதில் விரிசல் ஏற்பட்டு அமோனியா திரவம் கடலில் கலந்து காற்றில் பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணிக்கு ஏற்பட்டது.

குழாயில் இருந்து திரவம் வெளியேறிய பகுதியில் கடல் பகுதியில் கொப்பளிப்பு ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த வாயுவானது சின்னகுப்பம், பெரிய குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, வேன்களில் வேறு இடங்களுக்கு உடனே வெளியேறினர்.

தகவலறிந்து 30-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள், 20க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மூலம் அவர்கள் சமுதாய நலக் கூடங்கள், தேவாலயங்களில் தஞ்சமடைந்தனர். மூச்சுத்திணறலால் 30 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் ஆலையிலிருந்து வாயு கசிவு ஏற்படவில்லை என கோரமண்டல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் நிறுவனத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலுக்குடியில் புதைத்த குழாய்கள் எல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்பு பதியப்பட்டவை. அவற்றை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சென்னை எண்ணூரில் கோரமண்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது அம்மோனியா கசிந்தது எப்படி, இந்த நிறுவனம் மேலும் தொடர்ந்தால் ஆபத்தா, இல்லை அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்தவும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படவும் எந்த மாதிரியான வழிகாட்டு நெறிகளை வகுக்கலாம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆய்வு குழு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

எனவே ஆய்வு குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறையும் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+