"ரமலான்".. ஸ்டிரைட்டா விஷயத்துக்கு வந்த அர்ஜுன் சம்பத்.. அரிசி வேணுமாம்..தமிழக அரசிடம் மெகா கோரிக்கை
ஆடி அமாவாசை, ஆடிவெள்ளிக்கு தமிழக அரசு அரிசி தர வேண்டும் என அர்ஜுன் சம்பத் கேட்கிறார்
சென்னை: ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை போன்ற விழாக்களை முன்னிட்டு, தமிழக அரசுக்கு அர்ஜுன் சம்பத் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், அவர் பேசும்போது, "ஒரு இந்துக்கள் நடத்தும் பள்ளியில் பிரச்சினை ஏற்பட்டால், உடனே அந்த பள்ளிக் கூடங்கள் சூறையாடப்படுகின்றன.. ஆனால், இதே கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் பிரச்சனை ஏற்பட்டால் அது கண்டுகொள்ளப்படுவதில்லை..
சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தின் அஸ்திவாரமே கிறிஸ்தவர்கள்தான் என்றும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் தமிழர்களின் வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்லலாமா?

கிறிஸ்தவர்கள்
சபாநாயகர் அனைத்து மதத்தினருக்கும் சமமானவராகத்தானே இருக்க வேண்டும்? இவர் கிறித்தவ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாற்று மதத்தினரை இழிவாக பேசுகிறார்... மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று பேசலாமா? இதற்கு சபாநாயகர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கருப்பு கொடி காட்டுவோம்" என்று அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அப்பாவு
அப்பாவு பேசிய பேச்சும், அதையொட்டி சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மற்றும் இந்து மத தலைவர்களின் கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் நெருப்பாய் தகித்தன.. பல்வேறு கமெண்ட்கள் இரு தரப்பிலும் கிளம்பி, அது விவாதங்களாகவும் வெடித்தன.. மதரீதியான விஷயங்களை பேசினால், அது விவாதங்களில் கொண்டுபோய் விட்டுவிடுவது இயல்பு என்றாலும், இப்போதும் மதரீதியான விஷயங்களை கோடிட்டு ஒரு பேட்டி தந்துள்ளார் அர்ஜுன் சம்பத்.

ஆடி வெள்ளி
தஞ்சை மேலவீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்த பின்பு பொது மக்களுக்கு தேசிய கொடியினை வழங்கினார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "காவிரி கரையில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த முக்கிய விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்க தமிழ் அரசு அறிவிப்பு விட வேண்டும்.. ரமலான் மாதங்களில் நோன்பு கஞ்சியை அரசு வழங்கிவது போலவே, ஆடி மாதங்களில் ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு என விழாக்கள் இருப்பதால் ஆடி மாதங்களில் அறநிலை துறை சார்பில் அரிசி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்..

ரமலான் - கஞ்சி
அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள இந்த கோரிக்கைக்கும், கருத்துக்கள் இணையத்தில் பதிவாகி வருகின்றன.. நோன்பு கஞ்சியை பல வருடங்களாவே அரசு வழங்கி வருகிறது.. அப்போதெல்லாம் ஆடிப்பெருக்குக்கு அரிசி கேட்காமல் இப்போது ஏன் கேட்க வேண்டும்? என்று ஒரு சாரார் கேள்வி எழுப்புகிறார்கள்.. அர்ஜுன் சம்பத் கேட்பது சரியே.. இது அனைவருக்குமான அரசு.. அனைவருக்கும் அரசு உதவ வேண்டும் என்பதில் தவறில்லை என்று மற்றொரு சாரார் ஆதரவாக சொல்லி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications