பத்தல..பத்தல! தமிழக அரசுக்கு பறந்த பாமக அன்புமணியின் கோரிக்கை! கண்டிப்பாக ‘இதை’ செய்யனும்!
சென்னை: தமிழகத்தில் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே, அதிக முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தமாக 5,836 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளை தமிழக அரசு பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்நிய முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அந்நிய முதலீடுகள்
இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2022-23-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5,836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5,640 கோடியை விட ரூ.196 கோடி அதிகம் தான் என்றாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் போதுமானதல்ல.

5-வது இடத்தில் தமிழகம்
இதே காலத்தில் மராட்டியம் ரூ.40,386 கோடி (31.59%), குஜராத் ரூ,24,692 கோடி (19.31%), கர்நாடகம் ரூ.21,480 கோடி (16.80%), தில்லி ரூ.17,988 கோடி (14%) அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், தமிழ்நாடு 4.46% மட்டுமே ஈர்த்திருக்கிறது. ஐந்தாவது இடத்தையே பிடித்திருக்கிறது. 2019 அக்டோர் முதல் கடந்த ஜூன் வரையிலான சுமார் மூன்றாண்டுகளில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு ரூ.52,676 கோடி (4%) மட்டுமே அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இதிலும், மராட்டியம், கர்நாடகம், குஜராத், தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது.

மிகச்சிறந்த மனிதவளம்
இந்தியாவில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மிகச்சிறந்த மனிதவளம் உள்ளது. இந்தக் காரணிகளின்படி பார்த்தால் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதல் இரு இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும்.

அதிக முதலீட்டை ஈர்க்க வேண்டும்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை. இதற்காக பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல, தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து, அதிக முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications