தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனையா? தகவல் பலகை மட்டுமே.. தமிழக அரசு மறுப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் வகையில் புதிய இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கி வருவதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து புதிய விளக்கம் வெளியாகியுள்ளது.
தினமும் முட்டை விலை, பிராய்லர் கோழி விலை நிர்ணயித்து அறிவிக்கப்படுவது போல் ஆடு, மாடு, கோழி விலையும் அறிவிப்பதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி விலையில் மாற்றங்கள் உள்ளன. சென்னை விலைக்கும், மற்ற ஊர்களில் ஆட்டிறைச்சி விலைக்கும் வித்தியாசம் உள்ளது. இன்றைக்கு எங்கு என்ன விலை என்பது வெளிப்படையானதாக இல்லை. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை விற்பனை வீலையை வெளிப்படையாக தெரியப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
தினமும் உயிருடன் ஆடு, கோழி விலை மற்றும் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி விற்பனை விலையை அப்டேட் செய்து அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் டாக்டர் என் சுப்பையன், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதன்படி இனி தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி விற்பனை விலை தொடர்பாக அரசின் புதிய முயற்சி பற்றித் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "இனி தமிழ்நாடு ஆட்டிறைச்சி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தினமும் இறைச்சி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தினமும் எப்படி முட்டை விலை மற்றும் பிராய்லர் கோழி விலை நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்படுகிறதோ அதேபோல் இனி ஆடு, மாடு, கோழி இறைச்சிகளின் விலையும் அறிவிப்பு செய்யப்படும். ஆடு மற்றும் கோழி உயிருடன் என்ன விலை? இறைச்சி என்ன விலை? என இணையதளத்தில் தினசரி அப்டேட் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி விற்பதற்கு தமிழ்நாடு அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு ஆட்டிறைச்சி மற்றும் கால்நடைகள் விற்கப்படுவது தடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுமா எனக் கேள்வி எழுந்த நிலையில், அதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டிறைச்சி விலையை அறிவிப்பதற்கான தகவல் பலகை மட்டுமே தயாராகிறது என்றும் ஆட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கான விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய முடியாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆட்டிறைச்சி மற்றும் நாட்டுக்கோழி இறைச்சிக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய உள்ளதாக வெளியான தகவலுக்கு கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications