Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுப முகூர்த்தம், வீக் எண்ட்.. ஊருக்கு போக டிக்கெட் இல்லாமல் திண்டாடுறீங்களா? தமிழக அரசு சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுபமுகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், பெங்களூர், ஓசூர் என பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து கழகம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களில் 1,750 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு அதிகளவில் மக்கள் குடும்பத்துடன் செல்வது வழக்கம். தொழில், பணி உள்ளிட்ட காரணங்களுக்காக குடும்பத்துடன் பெரு நகரங்களில் குடியிருப்பவர்கள், பண்டிகை நாட்கள், கோடை விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

tn-govt-announced-special-buses-from-chennai-on-weekends-and-auspicious-days

1750 சிறப்பு பஸ்கள்

பலரும் ஒரே நேரத்தில் புறப்படுவதால் ரயில், பஸ்களில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் இருக்கும். இதனால் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணமும் அதிகரித்து விடுகிறது. சிறப்பு ரயில்கள் அறிவித்தாலும் கூட ரயில்களில் டிக்கெட் சட்டென விற்று தீர்ந்துவிடும். இதனால் கடைசியில் பலரும் அரசு விரைவு பஸ்களில் செல்ல முடிவெடுப்பார்கள். தமிழக அரசும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

அதன்படி தற்போது கோடைக்கால விடுமுறை என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் சொந்த ஊருக்கு அதிகளவில் மக்கள் செல்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும், 1750 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வெள்ளி, சனிக்கிழமைகளில்

* சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை 570 சிறப்பு பஸ்களும், 17 ஆம் தேதி சனிக்கிழமை 605 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* இதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூர் ஆகிய இடங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை 100 பஸ்களும், 17 ஆம் தேதி சனிக்கிழமை 90 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* இதேபோல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்தில் இருந்து 16ஆம் தேதி 24 சிறப்பு பஸ்களும், 17 ஆம் தேதி 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

* ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+