மாதம் ரூ.3,000 ; தங்குமிடம், உணவு இலவசம்; சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வானவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மாதம் ரூ.3,000 ஊக்கத் தொகையுடன் முதன்மை தேர்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக குடிமைப் பணி தேர்வு பயிற்சித் துறை தலைவரும், தலைமைச் செயலாளருமான இறையன்பு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது.
இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவர்களுக்கு இங்கு கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது.
தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த மையத்தில், இந்த ஆண்டு (2021), 225 பேர் தங்கிப் பயில, சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் 03.11.2021 (புதன்கிழமை) மாலை 6.00 மணி முதல் 07.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.00 மணி வரையில் "www.civilservicecoaching.com" என்ற இணையத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் 09.11.2021 (செவ்வாய்க்கிழமை) மாலை 06.00 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 10.11.2021 அன்று சேர்க்கை நடைபெறுவதோடு 11.11.2021 (வியாழக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் மாணவர்கள்,விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும்.
வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழினைக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேரும்போது ஒப்படைக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட / பட்டியலினத் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில் 225 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். கூறியிருக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications