ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. பீக் அவர்ஸ் மின் கட்டணம்.. தமிழக அரசு மேஜர் உத்தரவு வெளியிட வாய்ப்பு
சென்னை: பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறு சிறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தமோ அன்பரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். பேச்சுவார்த்தை அடிப்படையில் மின்சார துறையில் புதிய உத்தரவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மின்வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் , பீக் அவர்ஸ் நேர கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் , சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் , மல்டி இயர் டாரிப் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சிறு குறு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

ஆனால் இந்த கோரிக்கைகளை அரசு இதுவரை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் இன்று (செப். 25ம் தேதி) தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்திற்கு தெரிவித்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் நெட்டிங் எம்ராய்டரி பிரிண்டிங், சாய அலைகள் என 19 சங்கங்கள் ஆதரவு தருவதாக அறிவித்தன.
அதன்படி, இன்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் இன்று வேலை இழப்பை சந்தித்தனர். இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மட்டுமின்றி கோவை சிட்கோ தொழில்பேட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் கூடங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூடின. இதனால் இதேபோல் பல்வேறு சிறு குறு தொழில் நிறுவனங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.
சிறு குறு தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை பீக் அவர்ஸ் மின் கட்டண முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அடியோடு கைவிட வேண்டும் என்பதே கோரிக்கையாகும்.இதற்காகவே போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் இன்று வேலை நிறுத்தம் செய்த காரணத்தால், மின் கட்டணம் குறைப்பு சம்பந்தமாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இருப்பதால் அதற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாத வகையில் சிறுகுறு நிறுவனங்களுக்கான மின்கட்டணம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறு சிறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தமோ அன்பரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். பேச்சுவார்த்தை அடிப்படையில் மின்சார துறையில் புதிய உத்தரவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications